டிரம்ப்பை திசைதிருப்பிய ஈரான்..! முஸ்லிம்கள் ஒன்றிணைவோம்.!

Advertisements

ஈரான்ல இப்போ ரொம்பவே பரபரப்பான ஒரு சூழல் ஓடிக்கிட்டு இருக்கு. குறிப்பா, ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, வளைகுடா நாடுகளுக்கும் முஸ்லிம் உலகத்துக்கும் ஒரு செம முக்கியமான அழைப்பைக் கொடுத்திருக்கார். “நம்ம உண்மையான எதிரி யாருன்னு இன்னும் புரியலையா? எல்லாரும் ஒன்னு சேருங்க” அப்படின்னு அவர் வெளிப்படையா முழங்கியிருக்கார்.

இந்தச் செய்தி, முகமது நபியின் பிறந்த நாளை ஒட்டி அனுசரிக்கப்படுற ‘இஸ்லாமிய ஒற்றுமை வாரம்’ அப்போ  கமேனியோட டெலிகிராம் அக்கவுண்ட் மூலமா வெளியாகி உலக நாடுகளோட கவனத்தை ஈர்த்திருக்கு. அதுவும் ஆறு மாசத்துக்கு முன்னாடி அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்ல கமேனிக்குக் காயம் ஏற்பட்டு, அவரோட அப்பாவும் முன்னாள் உச்ச தலைவருமான அயதுல்லா அலி கமேனியும் கொல்லப்பட்டாங்க.

அந்த மரணத்துக்குப் பிறகு கமேனி தரப்பிலிருந்து வர்ற இந்த அதிரடி அறிக்கை, மத்திய கிழக்கு அரசியல்ல ஒரு பெரிய புயலையே கிளப்பியிருக்கு. இப்போ இந்தச் செய்தியோட முழுமையான பின்னணி குறித்து தற்பொழுது  பார்ப்போம்.

நம்மல பலபேருக்குத் தெரியும், 1979-ல ஈரானல நடந்த ‘இஸ்லாமிய புரட்சி’ தான் மத்திய கிழக்கு நாடுகளோட ஒட்டுமொத்த வரலாற்றையும் மாத்திப்போட்டது. அதுவரைக்கும் ஈரானை ஆட்சி செஞ்ச ஷா மன்னர் அமெரிக்காவோட நெருங்கிய நண்பரா இருந்தார். ஆனா, அயதுல்லா கொமேனி தலைமையில புரட்சி வெடிச்சதும், ஈரான் ஒரு கடுமையான மதவாத குடியரசாக மாறுச்சு.

அப்போ இருந்துதான் வளைகுடா நாடுகள்ல இருக்குற சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம்  மாதிரியான இஸ்லாமிய முடியாட்சி நாடுகளுக்கும், ஷியா பெரும்பான்மை கொண்ட ஈரானுக்கும் இடையே பனிப்போர் ஆரம்பிச்சது. ஈரானோட இந்த ‘புரட்சிகர சித்தாந்தம்’ எங்க எங்க நாடுகள்லயும் வந்து ஆட்சியை கவிழ்த்துடுமோனு வளைகுடா நாடுகள் பயந்தாங்க. அதனாலதான் அவங்க அமெரிக்கா கூட ரொம்ப நெருக்கமான ராணுவ உறவை வச்சுக்கிட்டாங்க.

சமீப காலமா இஸ்ரேலுக்கும் ஹமாஸ், ஹிஸ்புல்லா மாதிரியான ஈரான் ஆதரவு அமைப்புகளுக்கும் இடையில பயங்கரமான யுத்தம் போயிட்டு இருக்கு. பாலஸ்தீன மக்கள் காசா முனையில் படும் பாட்டை பார்த்தா, முஸ்லிம் நாடுகள் எல்லாம் ஏன் ஒன்னு சேர்ந்து குரல் கொடுக்க மாட்டேங்குறாங்கனு ஒரு ஆதங்கம் எப்பவுமே இருக்கு. அதான் கமேனி தன்னோட அறிக்கையில, “முஸ்லிம்கள் மட்டும் அன்னைக்கு ஒற்றுமையா இருந்திருந்தா, பாலஸ்தீன மக்கள் இன்னைக்கு இவ்வளவு உதவியற்றவர்களா நின்றிருப்பாங்களா?” அப்படின்னு ஒரு பெரிய கேள்வியை எழுப்பியிருக்கார்.

அதுமட்டுமில்லாம, வளைகுடா அரபு ஆட்சியாளர்களைப் பார்த்து ரொம்பவே சூடான ஒரு கேள்வியைக் கேட்டுருக்கார். “இஸ்லாத்தின் கொடியின் கீழ் வளைகுடா மக்களும் அரசாங்கங்களும் ஒன்றுபட்டிருந்தால், அடையாளமே இல்லாத அந்த முரடர்கள் உங்க நிலங்களையும் உடைமைகளையும் ஆசைப்படத் துணிந்திருப்பார்களா?” அப்படின்னு சாடியிருக்கார். அதாவது , அவர் முரடர்கள் என்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை குறிப்பிடுகிறார்..

ஆனா, மறுபக்கம் பார்த்தா, வளைகுடா நாடுகளுக்கும் ஒரு நியாயம் இருக்கு. சமீபத்திய மோதல்களின் போது, ஈரான் தரப்பு வளைகுடா நாடுகள்ல இருக்கிற அமெரிக்க ராணுவத் தளங்களையும் உள்கட்டமைப்புகளையும் குறி வச்சு தாக்கியிருக்கு. “எங்களை தாக்க உங்களோட மண்ணை அமெரிக்காவுக்கு கொடுக்கிறீங்க, அப்புறம் எப்படி நாங்க சும்மா இருக்க முடியும்?”ங்கிறதுதான் ஈரானோட வாதம்.

ஈரான் சொல்றது ஒண்ணே ஒண்ணுதான்: “நமக்குள்ள அடிச்சுக்கிறதை விட்டுட்டு, நம்ம உண்மையான எதிரி யாருன்னு பாருங்க. நம்மகிட்ட இருக்குற பிளவுகளை வச்சு வெளியில இருக்கிற சக்திகள் தான் லாபம் பார்க்குறாங்க. மறைமுகமாவோ அல்லது நேரடியாவோ முஸ்லிம்களிடையே பிரிவினையை உண்டாக்குற எவரும், இஸ்லாத்தின் எதிரிகளுக்குத்தான் கைக்கூலியா செயல்படுறாங்க.”

ஈரானிய மக்கள் மத்தியில குழப்பத்தை ஏற்படுத்த, நாட்டுக்குள்ள உள்நாட்டு குழப்பங்களை உருவாக்க யாரும் முயற்சி பண்ணக்கூடாதுன்னு கடந்த வெள்ளிக்கிழமையும் கூட கமேனி ஒரு கண்டிப்பான எச்சரிக்கை விடுத்திருந்தார். இப்போ வளைகுடா நாடுகளையும் சேர்த்து ஒரு கூட்டு ராணுவ அல்லது அரசியல் பாதுகாப்பை உருவாக்கணும்னு அவர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வர்றார்.

சுருக்கமா சொல்லப்போனா, பல வருஷமா அடிச்சுக்கிட்டாலும், மேற்கு ஆசியாவோட தற்போதைய சூடான போர்ச் சூழல் காரணமாக, வளைகுடா நாடுகளும் ஈரானும் கை கோர்த்தா மட்டும்தான் வெளியிலிருந்து வர்ற வல்லரசுகளின் ஆதிக்கத்தைத் தாக்குப் பிடிக்க முடியும்னு ஈரான் இப்போ பலமா நம்புது. ஆனா, பல தசாப்த கால பகைமை இதையெல்லாம் தாண்டி ஒரு ஒற்றுமையை உருவாக்குமாங்குறதுதான் இப்போ மில்லியன் டாலர் கேள்வி!

இதுவரை மாறி மாறி சண்டையிட்டு கொண்ட ஈரான் தற்பொழுது இந்த தகவலை வெளியிட்டது குறித்தும் , இந்த மனமாற்றம் குறித்தும்  நீங்கள் நினைப்பதை மறக்காமல் கமெண்டில் பதிவிடுங்கள்.!

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *