புஸ்ஸி ஆனந்த்தை கைவிட்ட CM விஜய்.! ஆடிப்போன சீனியர் அமைச்சர்கள்.!

தவெக தலைமை அலுவலகத்தில் இப்போ ஒரு பேரதிர்ச்சி நிலவிக்கிட்டு இருக்கு. கட்சி வளர்ந்து ஆட்சி நாற்காலி வரைக்கும் வந்தாச்சு, ஆனா இன்னைக்கு நிலவரம் என்ன தெரியுமா? கட்சியோட அடிமட்டத் தொண்டர்கள் இருக்கட்டும், ஏன்… அமைச்சர்களாலேயே கூட முதல்வர் விஜய்யை நேரில் நெருங்க முடியாத அளவுக்குச் சூழல் முற்றிலுமே மாறிப் போயிருக்கு!

ஒரு காலத்தில் கட்சியின் ஒட்டுமொத்த பலமாகவும், தளபதியின் வலது கரமாகவும் வலம் வந்த புஸ்ஸி ஆனந்தையே கட்சித் தலைமை ஓரம் கட்டிவிட்டதோ என்கிற சந்தேகம் இப்போ உச்சிக்குப் போயிருக்கு. அவருக்குப் பதிலாக சினிமா உலகிலிருந்து வந்த ஜெகதீஷ் பழனிசாமியின் கைகள் ஓங்கத் தொடங்கிவிட்ட நிலையில், “நம்ம நிலைமை என்னாச்சு?” என்று தெரியாமல் புஸ்ஸி ஆனந்தும், அவருடன் சேர்ந்து ஜூனியர் அமைச்சர்களும் என்ன செய்வதென்று அறியாமல் பரிதவித்துப் போயுள்ளனர்.

விஜய்யைச் சந்திக்க வேண்டுமென்றால் கூட தனிச் செயலாளர் ஜெகதீஷ் பழனிசாமியிடம் பர்மிஷன் கேட்க வேண்டிய அவல நிலை உருவாகியிருப்பதைப் பார்த்துக் கட்சியின் சீனியர்களே மிரண்டு போயிருக்காங்க. இந்த அதிரடி மாற்றங்களும், திரைமறைவில் நடக்கும் விஷயங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்..!

விஜய்யோட நீண்டகால மேனேஜரும், சினிமா உலகத்தைச் சேர்ந்தவருமான ஜெகதீஷ் பழனிசாமி, விஜய் அரசியலுக்கு வந்ததுமே தவெகவின் இணைப் பொருளாளரா நியமிக்கப்பட்டார். ஆரம்பத்துல எலெக்‌ஷன்ல கூட நிக்காம, திரைமறைவிலேர்ந்து தனது “ரூட்” நிறுவனம் மூலமா சோஷியல் மீடியா வேலைகளை மட்டும் பார்த்துட்டு இருந்தவர், இப்போ தவெக ஆட்சி அமைஞ்சதும் நேரா முதல்வரின் தனிச் செயலாளராவே மாறிட்டார்!

பொதுவா, அரசாங்கத்துல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்தான் இந்த மாதிரி முக்கியப் பதவிகளில் இருப்பாங்க. ஆனா, சினிமா உலகைச் சேர்ந்த ஒருத்தரை இந்த சீக்ரெட்டான பதவியில உட்கார வச்சது எதிர்க்கட்சிகளை ரொம்பவே யோசிக்க வச்சிருக்கு. அதுமட்டுமில்லாம, ஜெகதீஷ் பழனிசாமி தனக்கென தனி அரசியல் அடையாளத்தை உருவாக்கணும்னு நினைக்கிறாராம்.

குறிப்பா, தவெகவின் இளைஞரணிப் பொறுப்பைப் பிடிக்க அவரது ஆதரவாளர்கள் இப்போதே காய் நகர்த்தி வராங்க. இந்த விஷயம் விஜய்யோட காதுக்கும் போயிருக்கு, ஆனா அவர் என்ன முடிவு எடுக்கப் போறார்னு இப்போதைக்கு சஸ்பென்ஸ் தான்!

இப்போ தவெகல இருக்குற முன்வரிசை அமைச்சர்களைத் தவிர, மத்த அமைச்சர்கள் யாரும் முதல்வர் விஜய்யை நினைச்ச மாத்திரத்துல சந்திக்க முடியாத ஒரு சூழல் தான் இருக்கு. ஒரு அமைச்சர் முதல்வரைப் பார்க்கணும்னா, அதுக்கு நேரா தனிச் செயலாளர் ஜெகதீஷ் பழனிச்சாமிகிட்டதான் பெர்மிஷன் கேட்கணும்.

“எதுக்காகப் பார்க்கப் போறீங்க? என்ன விஷயம்?” அப்படின்னு ஜெகதீஷ் பழனிசாமி விவரங்களைக் கேட்பாராம். அவர் விசாரிச்சு, அவருக்கு ஓகேன்னு பட்டா மட்டும்தான் முதல்வரோட அப்பாயிண்ட்மெண்ட்டே கிடைக்கிறதாம்.

இல்லன்னா நேரா “வெயிட்டிங் லிஸ்ட்” தான்! குறிப்பா, ஜூனியர் அமைச்சர்கள் யாருக்குமே இதுவரைக்கும் அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்கலையாம். இதனால, “நம்மளாலயே நேரா முதல்வரைப் பார்க்க முடியலையே”னு அமைச்சர்கள் பலரும் உள்ளுக்குள்ளயே ரொம்பவே குமுறிக் கிடக்கிறாங்க.
இந்த விஷயத்துல என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்ச சில அதிருப்தி அமைச்சர்கள், நேரா தவெகவின் பொதுச்செயலாளரான அமைச்சர் புஸ்ஸி ஆனந்தைப் போய் பார்த்திருக்காங்க. “எப்படியாவது முதல்வர்கிட்ட பேசி எங்களுக்கு ஒரு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கித் தாங்கண்ணே” அப்படின்னு கேட்டுருக்காங்க.

அதுக்கு புஸ்ஸி ஆனந்த் என்ன சொன்னார் தெரியுமா? “அண்ணே… உங்களைப் போலத்தான் நானும் இருக்கேன்! என்னாலயும் உடனே போய் பார்க்க முடியல. இருந்தாலும் முதல்வர் தளபதிகிட்ட ஏதாவது ஒரு வழியில தகவல் சொல்றேன். அவர் கூப்பிட்டா போங்க, அதுவரைக்கும் வெயிட் பண்ணுங்க” அப்படின்னு சொல்லிக் கைவிரிச்சிட்டாராம்! புஸ்ஸி ஆனந்தே இப்படிச் சொல்றதைக் கேட்டு அமைச்சர்கள் இன்னும் ஷாக் ஆகிட்டாங்க.

மக்களால் எளிதில் அணுகக்கூடிய முதல்வராக மு.க. ஸ்டாலின் திகழ்ந்ததாக அன்று கூறப்பட்ட நிலையில், தற்போது அமைச்சர்களாலேயே முதல்வர் விஜய்யை எளிதில் நெருங்க முடியவில்லை என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்லையை ஏற்படுத்தியுள்ளது…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *