சபரிமலையில் நாளை மண்டல பூஜை!

Advertisements

திருவனந்தபுரம்:

புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை மண்டல பூஜை நடைபெற இருக்கும் நிலையில் இன்று தங்க அங்கி சன்னிதானத்திற்கு வர இருக்கிறது. இதை அடுத்து சன்னிதானத்தில் பக்தர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை காலம் அனுசரிக்கப்படுகிறது. 41வது நாள் மண்டல பூஜை நடக்கிறது. இந்த நிலையில் இந்தாண்டு கடந்த நவம்பர் 16ஆம் தேதியான மண்டல பூஜை தொடங்கியது.

இதற்காக நவம்பர் 15ஆம் தேதி மாலையே சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தில் நடை திறக்கப்பட்டது. மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து தீபம் ஏற்றினர். தொடர்ந்து 18-ஆம் படி வழியாகச் சென்று ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்க்கப்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோவில்:

தொடர்ந்து நவம்பர் 16ஆம் தேதி அதிகாலை 3 மணிக்குப் புதிய மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து தந்திரி பிரம்மாதத்தன் ஐயப்பன் சிலைக்கு நெய்யாபிஷேகம் செய்து மண்டல பூஜையைத் தொடங்கி வைத்தார். இதற்காக இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். மேலும் ஏற்கனவே மாலை அணிந்தவர்கள் ஐயப்பனை காண சபரிமலைக்கு படை எடுத்துள்ளனர்.

பெருவழிப்பாதை பயணம்:

இந்த நிலையில் சபரிமலை மண்டல பூஜைக்கு வரும் பக்தர்களுக்காக இடுக்கி மாவட்டத்தில் ஏராளமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. இடுக்கி மாவட்டம் சத்திரம், புல்மேடு வழியாகக் காட்டுப் பாதையில் சபரிமலைக்கு நடை பயணம் மேற்கொள்ளப்படுகிறது. ஏற்கனவே மாலை அணிந்தவர்கள் மட்டும் இல்லாது, புதிதாக மாலை அணிந்த கன்னி சாமிகளும் ஐயப்பனை தரிசிக்க ஆண்டு கூடுதலாகப் படை எடுத்து வருகின்றனர்.

நாளை மண்டல பூஜை:

இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலின் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை நாளை நடைபெற இருக்கிறது. இதற்காகத் தங்க அங்கி பம்பை வந்தடைந்துள்ள நிலையில் இன்று மாலை சன்னிதானம் கொண்டு செல்லப்படுகிறது. மண்டல பூஜைக்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில் பக்தர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து இருக்கிறது. தற்போது வரை சுமார் 30 லட்சம் பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் மேற்கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு இதே நாளை ஒப்பிடும்போது இது நான்கரை லட்சம் அதிகம் என்கின்றனர் அதிகாரிகள்.

பக்தர்கள் எண்ணிக்கை:

கடந்த 23ஆம் தேதி பக்தர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது. அன்று மட்டும் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 621 பேர் தரிசனம் செய்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இது மண்டல பூஜையில் அதிகபட்ச எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மண்டல பூஜை நாளை நடைபெற இருக்கும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. தங்க அங்கி இன்று பம்பையிலிருந்து சன்னிதானத்துக்கு கொண்டு செல்லப்படுவதால் மதியம் முதல் மாலைவரை சபரிமலை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படவில்லை.

மண்டல பூஜை:

இந்த ஆண்டு மண்டல பூஜை 26 ஆம் தேதி முடிவடைந்து அன்று இரவு 11 மணிக்கு நடை சாத்தப்படும். பின்பு மகர பூஜைக்காக 30ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 14ஆம் தேதி மகர விளக்கு விழா நடைபெற இருக்கிறது. ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்கி பம்பைக்கு இன்று ஒன்றரை மணிக்கு வந்து சேர்ந்தது மாலை 3 மணி அளவில் சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்படும் நிலையில் மதியம் ஒரு மணி முதல் நடை அடைக்கப்படுகிறது. பின்பு மூன்று மணிக்கு நடை திறக்கப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு ஐந்து மணிக்குத் திறக்கப்படுகிறது. தீபாராதனை வழிபாடு மற்றும் நடைபெறும் நிலையில் மாலை 6:40 மணிக்கு ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுகிறது. தொடர்ந்து தங்க அங்கி அலங்காரத்தில் ஐயப்பனை தரிசிக்கலாமெனத் திருப்பிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *