Today’s rasipalan:இன்றைய ராசிபலன்:25.07.2024

Advertisements

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக அமையும். அலுவலகத்தில் உங்களுக்கான பணியினை குறைவான நேரத்தில் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவி இடையே நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருவருக்கு ஒருவர் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். பண வரவு ஆனது நீங்கள் எதிர்பார்த்தை காட்டிலும் அதிகமாக இருக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு விருப்பமான நாளாக அமையும். ஆனாலும் கூட எந்தச் செயலைச் செய்தாலும் நிதானம் மிகவும் அவசியம். பணியிடத்தில் உங்களுக்கான அங்கீகாரத்தை பெறுவதற்கு கவனமும் திட்டமிடுதலும் மிகவும் அவசியம். உங்களது துணையிடம் புரிந்துணர்வு அதிகரித்து ஒற்றுமையாக இருப்பீர்கள். பண வரவு உங்களின் அன்றாட தேவைக்குப் போகச் சேமிக்கும் அளவில் அதிகமாக இருக்கும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கிறது. கூடுதல் பணிகள் இருப்பதனால் அதனைச் சற்று செய்து முடிப்பதற்கு தாமதம் ஆகும் சூழல் உண்டாகும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். மேலும் பண வரவு குறைவான அளவே காணப்படும். மேலும் பண விஷயத்தில் கவனமாக இருத்தல் வேண்டும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு மிதமான பலன்களை அளிக்கக்கூடிய நாளாகத் தான் அமையும். அலுவலகத்தில் உங்களுக்கான பாராட்டுகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் சிலருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் அதிகரித்து காணப்படும். இன்று பண வரவு அளவுக்கு அதிகமாக இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு சற்று சீரான நாளாக இருப்பதனால் அமைதியாக இருப்பது நல்லது. பணியிடத்தில் வழக்கத்திற்கு மாறாக வேலை இருப்பதனால் அதனைச் சரியாகச் செய்து முடிக்கத் திட்டமிடுதல் மிகவும் அவசியம். துணையிடம் வீண் விவாதங்களைத் தவிர்த்துப் பொறுமையாக இருப்பது நல்லது. மிகவும் குறைவான அளவே நிதிநிலை இருக்கும். மேலும் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு உற்சாகம் நிறைந்த நாளாக அமையும். நீங்கள் நினைத்ததை காட்டிலும் அலுவலகத்தில் பாராட்டுகள் கிடைக்கும். மேலும் உங்களுக்கான அங்கீகாரமும் கிடைக்கும். உங்கள் துணையுடன் அன்பாகப் பழகுவதன் புரிதல் ஏற்படும். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமான இருக்கும். பணிகளைச் சிறப்பாக முடிப்பதற்கு விட முயற்சியினை மேற்கொள்வதன் மூலம் வெற்றி கிட்டும். கணவன் மனைவி இடையே மனம் விட்டுப் பேசிப் புரிந்துணர்வை அதிகரித்து கொள்வீர்கள். பண வரவு சற்று குறைவாக இருப்பதனால் தேவையற்ற செலவினை குறைத்து கொள்வது நல்லது.

விருச்சிகம்


விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கவலையும், பதற்றமும் நிறைந்த நாளாகத் தான் இருக்கும். ஆகையால் பாடல்கள் கேட்பதன் மூலம் மனஅமைதி ஏற்படும். நீங்கள் உங்கள் பணிகளைச் சரியாக முடிக்கத் திட்டமிட்டு செயல்பட வேண்டும், ஏனென்றால் அப்போது தான் வெற்றி கிடைக்கும். உங்களது துணையிடம் நட்பான முறையில் பேசுவது நல்லது. வரவும், செலவும் கலந்த நாளாகவே காணப்படும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு ஆக்கப்பூர்வமான நாளாகத் தான் இருக்கும். பணியிடத்தில் அதிக பணிகள் காரணமாகப் பணியில் தவறுகள் நேர வாய்ப்பு இருப்பதால் கவனம் முக்கியம். குடும்பத்தில் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் சந்தோஷம் உண்டாகும். மேலும் உங்களது அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவில் மட்டுமே பண வரவு இருக்கும்.

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு விருப்பமற்ற நாளாகத் தான் இருக்கும். அலுவலகசூழல் உங்களது மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்காது. உங்கள் துணையிடம் உணர்ச்சி வசப்பட்டு நடந்து கொள்வீர்கள், இதனால் வீண் விவாதங்கள் ஏற்படும். ஆகையால் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். நிதிநிலை மிகவும் குறைவாக இருப்பதனால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு வெற்றி அளிக்கும் நாளாக இருக்கும். நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் நன்மையினை அளிக்கும். உங்களது திறமையினை வெளிப்படுத்துவதன் மூலமாக வெற்றி உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடமும், உங்களது துணையிடமும் மகிழ்ச்சியாகப் பேசுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்தை காட்டிலும் நிதிநிலை சிறப்பாக இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்காது. அலுவலகத்தில் அதிகப் பணிகள் காரணமாகக் குறித்தநேரத்தில் உங்கள் பணிகளை முடிக்க இயலாமல் தாமதம் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வரவைக் காட்டிலும் செலவுகள் அதிகமாக இருக்கும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *