
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தைக் காணலாம்…
தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள்மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், தங்கம் விலை கடந்த 2 நாட்களாக உயர்ந்து வருகிறது.
நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.44,320-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,540க்கு விற்பனையானது.

இன்றைய (செப்டம்பர் 19) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.44,400-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,550ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,020ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 48,160ஆக விற்பனையாகிறது.
வெள்ளி விலை 30 காசுகள் உயர்ந்து கிராம் வெள்ளி ரூ.78.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.78,300க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


