குழந்தைகள் தினம் – முதல்வர் விஜய் வாழ்த்து..!

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் விஜய், குழந்தைகளுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். குழந்தைகளின் தனித்திறமைகளைக் கண்டறிந்து, அவர்களின் கனவுகள் நனவாகத் தேவையான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், குழந்தைகளின் எதிர்காலத்தை வளப்படுத்தி, வளமான தமிழகத்தையும் வலிமையான இந்தியாவையும் உருவாக்குவோம் எனக் கூறி, அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *