Today rasipalan: இன்றைய ராசிபலன் – 08.10.24

Advertisements

Today rasipalan:இன்றைய ராசிபலன் – 08.10.24

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
இன்றைய பஞ்சாங்கம்

குரோதி வருடம் புரட்டாசி மாதம் 22-ம் தேதி செவ்வாய்க்கிழமை

நட்சத்திரம் : இன்று அதிகாலை 12.34 வரை அனுஷம் பின்பு கேட்டை

திதி : இன்று காலை 08.06 வரை பஞ்சமி பின்பு சஷ்டி

யோகம் : சித்த, அமிர்த யோகம்

நல்ல நேரம் காலை : 08.00 – 09.00

நல்ல நேரம் மாலை : 4.45 – 5.45

ராகு காலம் மாலை : 03.00 – 04.30

எமகண்டம் காலை : 09.00 – 10.30

குளிகை மாலை : 12.00 – 1.30

கௌரி நல்ல நேரம் காலை : 10.45 – 11.45

கௌரி நல்ல நேரம் மாலை : 7.30 – 8.30

சூலம் : வடக்கு

சந்திராஷ்டமம் : அஸ்வினி, பரணி

ராசிபலன்

மேஷம்


அஸ்வினி, பரணி நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் இன்று சந்திராஷ்டமம் என்பதால் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. காரணம் அந்தப் பயணங்களால் நன்மை பெரிதாக இருக்காது. இதனால் நேரமும் பணவிரையமும் ஏற்படும். ஆதலால், இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை. கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு கவலை வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

ரிஷபம்


அண்டை வீட்டாரிடம் நட்பு பலப்படும். பணம் பாக்கெட்டை நிரப்பும். வியாபாரத்தில் உள்ளவர்கள் பழைய சரக்குகளை விற்று விடுவீர்கள். தம்பதிகள் பொறுப்புணர்வர். வீடு வாங்க கேட்ட வங்கிக் கடன் வந்தடையும். மாணவர்கள் படிப்பு மட்டுமல்லாமல் கலைத்துறையிலும் ஈடுபாடு கொள்வர்.

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

மிதுனம்


தம்பதிகளிடையே புரிதல் ஏற்படும், உறவினர்கள் நல்ல செய்தியுடன் வருவர். பெற்றோர்களது உடல் நலனைக் கவனிப்பது நல்லது. விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் உண்டாகும். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு அதிக ஆர்டர்கள் கிடைக்கும். காதலர்களுக்கு மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும்.

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

கடகம்


மாணவர்கள் விளையாட்டில் கோப்பையை வெல்வர். வெளிநாடு முயற்சி பலிதம் தரும். திருமணமாகாத கன்னிப்பெண்களுக்கு நல்ல வரன் அமையும். உடல் நலம் தேறும். வேலைக்கான எதிர்பார்த்த செய்தி உங்களுக்குச் சாதகமாகவே நிகழும். பிள்ளைகளைச் சற்று கண்காணிப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

சிம்மம்


பழைய வீட்டைச் சீர் செய்வீர்கள். தம்பதிகளிடையே அன்பு பலப்படும். உடல் நலம் சிறக்கும். கலைஞர்களுக்குக் கற்பனைத் திறன் அதிகரிக்கும். பெண்களுக்கு இருந்து வந்த மாதவிடாய் பிரச்சினை நீங்கும். தொழிலதிபர்கள் தங்கள் கீழ் வேலை செய்யும் பணியாளர்களின் நேர்மையைக் கண்டு நிர்வாகம் உயர் பதவியைத் தரும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

கன்னி


வியாபாரிகள் முதலீட்டைப் பெருக்குவர். வி.ஐ.பி களின் தொடர்பால் நன்மை கூடும். பெற்றோர் நலனில் அக்கறை காட்டி வருவீர்கள். பெண்கள் புது ரக ஆடைகளை வாங்கி இன்புறுவர். உடல் நலம் சீராக இருக்கும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர். பங்கு சந்தையில் சில மாற்றங்கள் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

துலாம்


வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவீர்கள் நீண்ட தூர பயணத்தைத் தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கல் சீராகச் செல்லும். அரசியல்வாதிகளின் எண்ணம் ஈடேறும். திருமணமாகாதவர்களுக்கு ஏற்றத் துணை கிடைக்கும். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கட்டளையினை ஏற்பர். இளைஞர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

விருச்சிகம்


கூட்டு வியாபாரிகளிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். உறவினர்கள் வருகை இன்பமளிக்கும். வியாபாரிகளுக்குத் தள்ளுபடியால் விற்பனை கூடும். உயர் கல்விக்காக வெளியூர் அல்லது வெளிநாடு செல்லத் திட்டமிடுவீர்கள். மகளுக்கு ஏற்றத் துணையை தேர்ந்தெடுப்பர்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

தனுசு


மாணவர்கள் நன்கு படிப்பர். உடல் நலம் மேம்படும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் தங்களுக்கு உதவுவர். திடீர் பணவரவு ஆனந்தத்தைத் தரும். திருமண பேச்சுவார்த்தைகள் இனிதே முடியும். மாணவர்கள் கல்விச் சுற்றுலா செல்ல ஆசைப்படுபவர்களுக்கு பெற்றோர்கள் சம்மதிப்பர். இருவரும் இணைந்து முடிவெடுப்பர். உடல் நலம் சிறப்படையும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

மகரம்


ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத் தலைவி சேமிக்கத் துவங்குவர். எதிர்பார்த்த வேலை தாமதமின்றி விரைவில் முடியும். பிள்ளைகளின் எண்ணத்தை ஈடேற்றுவீர்கள். பங்கு சந்தைமூலம் பணம் வரும். கடன் கட்டுக்குள் அடங்கும். வங்கிப் பணியாளர்கள் மேன்மை அடைவர்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

கும்பம்


உத்யோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். சில்லரை வியாபாரிகள் லாபமடைவர். பிள்ளைகள் நல் வழியில் செல்வர். ஆசிரியருக்குப் பாராட்டுகள் குவியும். பெண்களுக்குத் தாங்கள் எதிர்பார்த்த வரன் அமையும். தேகம் பளிச்சிடும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

மீனம்


பிரிந்த நண்பர்கள் அன்பு பாராட்டுவீர்கள். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நன்மதிப்பைப் பெறுவர். தம்பதிகளிடையே ஒற்றுமை பலப்படும். பெற்றோரின் உடல் நலத்தை கவனிப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. நண்பர்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்றுவர்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *