
மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்காது. மற்றவர்களுடன் பழகும்போது கவனமாகப் பழக வேண்டும். நீங்கள் எதிலும் பொறுமையாக இருக்க வேண்டும். பணியிடத்தில் பணியில் அதிக முயற்சி எடுக்க வேண்டும். மேலும், பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. துணையுடன் மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணப்புழக்கம் குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தில் தொண்டை சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. பணியிடத்தில் உங்களுக்குச் சாதகமான சூழ்நிலை நிலவாது. மேலும், சக பணியாளர்களுடன் சுமூகமான உறவு இருக்காது. துணையுடன் உணர்ச்சிவசப்பட்டு பேசுவீர்கள். தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கால்களில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. உங்களுக்குப் பொறுப்புகள் அதிகமாக இருக்கும். எதையும் பொறுமையாகக் கையாள வேண்டும். பணியிடத்தில் கடினமான சூழ்நிலை நிலவும். குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க முடியாமல் அவதிப்படுவீர்கள்.பணப்புழக்கம் குறைந்து காணப்படும். இதனால், சிறிய அளவில் கடன் வாங்க நேரிடலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கிறது. உங்களிடம் நல்ல வளர்ச்சி காணப்படும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கு உகந்த நாள். பணியிடத்தில் உங்கள் பணிகளைத் திறம்பட செய்து முடிப்பீர்கள். துணையுடன் அன்பான வார்த்தைகளைப் பகிர்ந்து கொள்வீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. எந்தச் செயலையும் ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து செய்தல் வேண்டும். பணியிடத்தில் அதிக பணிச்சுமை இருக்கும். துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும். அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. பண இழப்பிற்கான வாய்ப்புள்ளதால் பணத்தை கவனமாகக் கையாள வேண்டும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு சுமாரான நாளாக இருக்கிறது. நீங்க வெற்றி பெறுவதற்கு அதிக முயற்சிகள் எடுக்க வேண்டும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். இது உங்களுக்குச் சவாலாக இருக்கும். துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும். வரவுச் செலவு இரண்டும் கலந்து காணப்படும். ஆரோக்கியத்தில் செரிமான கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு சற்று மந்தமான நாளாக இருக்கிறது. முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள் அல்ல. பணியிடத்தில் உங்கள் பணிகளைத் திரமப்பட ஆற்ற இயலாது. துணையுடன் வீண் விவாதத்தில் ஈடுபடுவீர்கள். தேவையற்ற கூடுதல் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தினரின் மருத்துவ செலவிற்காகப் பணத்தை செலவு செய்வீர்கள்.
விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு வெற்றி பெறக்கூடிய நாளாக இருக்கிறது. மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணியிடத்தில் சிறப்பாகப் பணியாற்றி மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள். துணையுடன் காதல் உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். நிதிநிலைமை சீராக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு நன்மை தீமை இரண்டும் கலந்து காணப்படுகிறது. நீங்கள் வேலையில் மும்மரமாக இருப்பீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு பயன்படுத்தி கொள்ளலாம். திருமணம்பற்றிய முடிவு எடுப்பதை வேறொரு நாளைக்கு தள்ளி வைப்பது நல்லது. செலவுகள் அதிகமாக இருக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காகச் செலவு செய்ய நேரிடும்.
மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. நீங்கள் புத்திசாலித்ததுடன் நடந்துகொள்ள வேண்டும். பணியிடத்தில் பணிசார்ந்த பயணம் காணப்படுகிறது. மேலும், பணிகளைத் திட்டமிட்டு பணியாற்றுவது அவசியம். துணையுடன் நட்பான அணுகுமுறை அவசியம். பணவிஷயத்தில் உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள். ஆரோக்கியத்தில் தலைவலி பிரச்சனைகள் ஏற்படலாம்.
கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு மந்தமான நாளாக இருக்கிறது. உங்கள் செயல்களில் கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் உங்களுக்குச் சாதகமான சூழ்நிலை நிலவாது. பணிகள் தவறுகள் நேரலாம். துணையிடம் பொறுமை இழந்து பேசுவீர்கள். பணத்தை கையாள்வதில் சிக்கல்கள் ஏற்படும்.
மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்கிறது. பயனுள்ள முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பணியிடத்தில் சிறப்பாகப் பணியாற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள். துணையுடன் இனிமையான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள்.நிதிநிலைமை சாதகமாக இருக்கும். சேமிப்பு உயரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

