Today Rasi Palan:இன்றைய ராசிபலன் – 26.10.2024

Advertisements

Today Rasi Palan – 26.10.2024

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்
இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் ஐப்பசி மாதம் 9-ம் தேதி சனிக்கிழமை

நட்சத்திரம்: இன்று பிற்பகல் 02.22 வரை ஆயில்யம் பின்பு மகம்

திதி: இன்று காலை 7.44 வரை நவமி பின்பு தசமி

யோகம்: மரண, அமிர்த யோகம்

நல்ல நேரம் காலை: 07.45 – 08.45

நல்ல நேரம் மாலை: 04.45 – 5.45

ராகு காலம் காலை: 9.00 – 10.30

எமகண்டம் மாலை: 1.30 – 3.00

குளிகை காலை: 6.00 – 7.30

கௌரி நல்ல நேரம் காலை: 10.45 – 11.45

கௌரி நல்ல நேரம் மாலை: 9.30 – 10.30

சூலம்: கிழக்கு

சந்திராஷ்டமம்: மூலம், பூராடம்

இன்றைய ராசிபலன்:
மேஷம்


வியாபாரிகள் வெளியூர் பயணம் மேற்கொள்வர். தம்பதியரிடையே அன்பு மேலோங்கும். நீங்கள் விரும்பிய வீடு கட்ட வங்கியிலிருந்து எதிர்பார்த்த பணம் கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரிகள் வியாபாரத்தில் லாபத்தை காண்பர். விளையாட்டு வீரர்கள் பதக்கம் பெற்று தாய்நாடு திரும்புவர்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

ரிஷபம்


தம்பதிகள் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்வர். வாகன பராமரிப்பு செலவு ஏற்படும். வெளியூர் பயணம் வெற்றி தரும். குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவர். உடல்நிலை நன்றாக இருக்கும். மார்கெட்டிங்பிரிவினர் அதிக ஆர்டர்கள் பெறுவர். கணினி துறையில் இருப்பவர்களுக்குச் சம்பள உயர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

மிதுனம்


விற்பனையாளர்கள் சாதுர்யமாகப் பேசி விற்பனையைக் கூட்டுவர்.குடும்பத்துடன் வெளிநாடு சுற்றிப் பார்க்கத் திட்டமிடுவர். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறைத் தேவை. வீடு கட்ட கடன் வசதி கிடைக்கும். காதல் கசக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

கடகம்


மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். ஷேர் மூலம் பணம் வரும். வழக்கில் திருப்பம் ஏற்படும். திருமண பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். பிள்ளைகளின் எதிர்காலம்குறித்த கவலைகள் அவ்வப்போது வரும். வெளிநாடு பயணம் மேற்கொள்வீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

சிம்மம்


உத்யோகஸ்தர்களுக்கு தாங்கள் விரும்பியவாறு இடமாற்றம் உண்டாகும். சிறு வியாபாரிகளுக்கு விற்பனை மிகும். பெரிய விசயங்கள் சட்டென்று முடியும். பணவரவு திருப்தி தரும். எதிர்பார்த்த ஒரு நற்செய்தி வரும். நினைத்த காரியம் வெற்றி பெறும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். உடன்பிறந்தவர்கள் அன்புடன் நடந்து கொள்வர்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

கன்னி


நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வியாபாரம் லாபகரமாகச் செல்லும். வெளிநாட்டுத் தொடர்பால் நன்மைகள் கூடும். வியாபாரத்தில் பணவரவு அதிகரிக்கும். கடன் அன்பை முறிக்கும். ஆதலால், கொடுக்கல் வாங்கலில் கவனம். கல்யாணம், கிரகப் பிரவேசத்தில் முதல் மரியாதைக் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

துலாம்


உணவு விசயத்தில் கட்டுபாடு அவசியம். வெளியூர் செல்வதில் திட்டங்கள் மாறும். உத்யோகஸ்தர்கள் அதிகாரிகளிடம் பாராட்டைப் பெறுவர். உடல் நலம் பளிச்சிடும். தம்பதிகளிடம் அரவணைப்பு இருக்கும். வாகனத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். தந்தைவழி சொத்துக் கைக்கு வரும். கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

விருச்சிகம்


தாயார் தங்களுக்கு உதவிகரமாக இருப்பார். கணவன்-மனைவி மனம் விட்டுப் பேசிச் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சுப காரியம் கைகூடும். நண்பர்களிடம் தங்கள் அந்தரங்க விசயத்தைப் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது அனைத்து விதத்திலும் நல்லது. தெய்வீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

தனுசு


இன்று மூலம், பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். தேவையற்ற மனக்குழப்பங்கள் வந்து போகும். ஆதலால், இறைவனை மட்டும் இன்று பக்தியுடன் கும்பிடுவது நல்லது. முடிந்தால், தியானம் செய்யவும்.

அதிர்ஷ்ட நிறம்: வான்நீலம்

மகரம்


பெண்கள் சுயதொழிலில் முன்னேற்றம் காண்பர். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து கொண்டு அத்தியாவசியத்தை மட்டும் செய்யப்பாருங்கள். வீட்டை அலங்கரிப்பீர்கள். விருந்து விழா என்று கலந்து கொள்வீர்கள். உடல்நிலையில் சிறு பாதிப்பு வரலாம். குறித்த நேரத்தில் உணவு உட்கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

கும்பம்


குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக்கூடும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். திடீர் பயணங்கள் வந்துப் போகும். ஒரு சிலர் நவீன வாகனம் வாங்குவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மதிப்பார்கள். மாணவர்கள் காதலில் சிக்கிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை

மீனம்


உத்யோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் அனுசரிப்பது நல்லது. ஆவணங்களைப் பாதுகாப்பீர்கள். பொதுநலத் தொண்டாளர்களுக்கு பெரிய பதவிகள் தேடி வரும். தம்பதிகளிடையே மனஸ்தாபம் ஏற்படும். விட்டுக் கொடுத்துச் செல்லவும். மூத்த சகோதரி வகையில் உதவிகள் உண்டு. கை, கால் வலி வந்துப் போகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *