
நடிகை ஷிவானி நாராயணன் தற்போது பிங்க் நிற சல்லடை போன்ற சேலையில்… ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து எடுத்துக் கொண்டுள்ள போட்டோஸ் வைரலாகப் பார்க்கப்பட்டு வருகிறது.
சிறு வயதிலேயே நடிகையாக வேண்டும் என்று முடிவுச் செய்தவர் விருதுநகர் பெண்ணான ஷிவானி நாராயணன். இதே ஆசையோடு, ஊரிலிருந்து புறப்பட்டுச் சென்னை வந்து செட்டில் ஆன ஷிவானி 15 வயதிலேயே சீரியலின் நடிக்க வாய்ப்பு தேட துவங்கினார்.
16 வயதிலேயே 23 பெண்போல் இருக்கும் இவரின் தோற்றம் இவருக்கு ‘பகல் நிலவு’ சீரியலில் கதாநாயகி வாய்ப்பைப் பெற்று தந்தது. இந்தச் சீரியலில் பிக்பாஸ் அசீம் ஹீரோவாக நடித்தார். இதைத் தொடர்ந்து, இதைத் தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீரியலில் கெஸ்ட் ரோலில் நடித்தார்.
பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில்… அஸீமுடன் கலந்து கொண்டு தன்னுடைய நடன திறமையைக் காட்டிய ஷிவானி மூன்றாவது இடத்தைப் பிடித்தார். அசீம் மற்றும் ஷிவானி இடையே உள்ள கெமிஸ்ட்ரி அதிகம் பேசப்பட்ட நிலையில், இருவரும் காதலித்து வருவதாகவும் தகவல்கள் பரவத் துவங்கியது.
இதன் காரணமாக அஸீமுடன் ஷிவானி நடித்து வந்த, ‘கடைக்குட்டி சிங்கம்’ சீரியலிலிருந்து விலகினார். விஜய் டிவியிலிருந்து ஜீத்தமிழுக்கு தாவிய ஷிவானி, இரட்டை வேடத்தில் நடித்து வந்த சீரியல் ‘இரட்டை ரோஜா’. இந்தச் சீரியல் எதிர்பார்த்த அளவுக்குக் கைக்கொடுக்காத நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலிருந்து வந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டு, பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.
பிக்பாஸ் வீட்டிலிருந்து 98-ஆவது நாளில் வெளியேறிய ஷிவானி, இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என முடிவு செய்து… ஏராளமான சீரியல் வாய்ப்பு தேடி வந்த போதும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
மேலும், விக்ரம், வீட்டுலவிசேஷம், DSP, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், பம்பர் போன்ற படங்களில் நடித்தார். தற்போது இவரின் கைவசம், சில படங்களுள்ள நிலையில்… அவ்வப்போது விதவிதமான போட்டோ ஷூட் செய்து அதனை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது சல்லடை போன்ற பிங்க் நிற சேலையில், ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து ஷிவானி நாராயணன் எடுத்துக் கொண்டுள்ள போட்டோஸ் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.

