Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 24.01.2024

Advertisements

மேஷம்

 

இன்று சாதகமான பலன்கள் கிடைக்காது. நல்ல இசையைக் கேட்பதன் மூலம் உங்கள் மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கலாம்.உணர்ச்சி வசப்படாமல் இருங்கள்.இன்று பணிச்சுமை அதிகமாக காணப்படும். திறமையாக பணியாற்ற யதார்த்தமான அணுகுமுறையைக் கையாள வேண்டும். உங்கள் துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். சகஜமான அணுகுமுறையை கையாளவும்.
இன்று அதிகரிக்கும் செலவினங்கள் காணப்படும். பணத்தட்டுப்பாடு இருக்கும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.சளி மற்றும் இருமல் தொந்தரவுகள் காணப்படலாம். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

ரிஷபம்

இன்று அதிர்ஷ்டங்கள் நிரம்பிய நாளாக இருக்கும். உங்கள் தனித்திறமை மற்றும் உற்சாகத்தின் மூலம் உங்கள் இலக்குகளை அடைவீர்கள். இதனால் சாதகமான பலன்கள் கிடைக்கும்.உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அந்த வாய்ப்புகளை வெற்றிகரமாக பயன்படுத்துவீர்கள்உங்கள் குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடக்கும். உங்கள் துணையுடன் பயனுள்ள நேரத்தை கழித்து மகிழ்ச்சியான தருணங்களை கொண்டாடுவீர்கள்.பணியிடத்தில் பதவி உயர்விற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் உங்கள் சம்பளம் உயரும்.இன்று எந்தவிதமான ஆரோக்கிய குறைபாடும் இருக்காது. நீங்கள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.

 

மிதுனம்

 

இன்று சாதகமான விளைவுகள் காணப்படாது. அதிர்ஷ்டத்தை விட உங்கள் சுய முயற்சியில் நம்பிக்கை வையுங்கள். முக்கியமான முடிவுகள் எடுப்பதை இன்று தவிர்க்கவும்.இன்று இறுக்கமான பணிச்சூழல் காணப்படும். அமைதியான நிலை காணப்படாது. உங்கள் பணிகளை ஒழுங்கமைத்து செயலாற்றுங்கள். உங்களிடம் காணப்படும் பதட்டம் உறவினை பாதிக்கும். அமைதியாக இருந்து எதையும் சகஜமாக எடுத்துக்கொள்ளுங்கள்.பண வருவாய் குறைந்து காணப்படும். கூடுதல் செலவுகள் உங்களை கவலைப்பட வைக்கும்.இன்று அசௌகரியமாக உணர்வீர்கள். இதனால் மனதில் பதட்டம் உண்டாகும்.

கடகம்

 

இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும். ஆன்மீக ஈடுபாட்டின் மூலம்அதனை நீங்கள் சமாளிக்கலாம். நீங்கள் பல பணிகளில் மும்மரமாக காணப்படுவீர்கள்.பணியிடத்தில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. மேலும் தவறுகள் நேராமல் இருக்க உங்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும்.தற்புக்ழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும். வார்த்தைகள் கவனமின்றி உதிர்க்கும் வாய்ப்புள்ளதால் அமைதியாக இருக்க வேண்டும்.வரவும் செலவும் இனைந்து காணப்படும். உங்கள் தேவைகளை சமாளிக்க பணத்தை கவனமாக கையாள வேண்டும்.இன்று ஆரோக்கியம் சுமாராக இருக்கும். சளித் தொந்தரவுகள் காணப்படும்.

 

சிம்மம்

 

தேவையில்லாத மனக் கவலைகள் வருத்தத்தை அளிக்கும். அம்மாதிரியான கவலைகளை தவிர்ப்பது நல்லது. பிரார்த்தனை மற்றும் தியானத்தில் ஈடுபடுவது நல்லது.பணி இறுக்கமாக காணப்பட்டாலும் குறித்த நேரத்தில் பணிகளை முடிப்பீர்கள். பணிகளை நம்பிக்கையுடன் கையாள்வீர்கள்.உங்களிடம் காணப்படும் மனக் குழப்பங்களை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். மகிழ்ச்சியை தக்க வைக்க மனதை அமைதியாக வைத்திருங்கள்.பணப் புழக்கம் குறைவாக காணப்படும். பண இழப்பு காணப்படும். இது ஏமாற்றத்தை தரும்.இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
 

கன்னி

 

இன்று அனுகூலமான பலன்கள் காணப்படும். உங்கள் இலக்குகளை நோக்கி நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சரியாக திட்டமிட்டால் இன்று வெற்றி காணலாம்.உங்கள் பணியிடத்தில் உற்சாகமான வாய்ப்புகள் காணப்படும். இனிமையான சூழல் காணப்படும். பணியை விரும்பி செய்வீர்கள்.உங்கள் துணையுடன் நல்லுறவை பராமரிப்பீர்கள். இனிமையான வார்த்தைகளைப் பேசி உங்கள் துணையை மகிழ்விப்பீர்கள்.பண வரவு மகிழ்ச்சியை அளிக்கும். பணத்தை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்துவீர்கள்.உங்களிடம் காணப்படும் உற்சாகம் காரணமாக இன்று ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.

 

துலாம்

 

இன்று சிறந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள். எதிர்பாராத வெற்றிகள் உங்களுக்கு திருப்தியை அளிக்கும். விருந்த்தாளிகள் வருகை மகிழ்ச்சியை அளிக்கும்.உங்கள் பணி சலிப்பை தருவதாக உணர்வீர்கள். இறுக்கமான வேலை காரணமாக பணிகள் நிலுவையில் இருக்கும்.உங்கள் துணையிடம் நேர்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். உறவு நல்லுறவாக காணப்படும்.இன்று நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். உங்கள் கடின உழைப்பிற்கான ஊக்கத் தொகை அல்லது சலுகைகள் வடிவில் பணவரவு காணப்படும்.இன்று ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும். சிறந்த தேக ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.

 

விருச்சிகம்

 

இன்று சவால்களை பொறுமையுடன் கையாள வேண்டிய சூழ்நிலை காணப்படும். உங்கள் முன்னேற்றத்தில் மந்த நிலை காணப்படும். அதிகமாக சிந்திப்பதை தவிர்த்து ஆக்கப்பூர்வமாக தெளிவுடன் சிந்தியுங்கள்அதிக வேலை காரணமாக தவறுகள் ஏற்படலாம். கவனமாக பணிகளை கையாள வேண்டும். பணிகளை முன்கூட்டியே திட்டமிடல் வேண்டும்.இன்று உங்களிடம் உணர்ச்சிவசப்பட்ட அணுகுமுறை காணப்படும். இது புரிந்துணர்வை பாதிக்கும். அமைதியாக நட்பான அணுகுமுறை தேவைஇன்று பண இழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்களின் பிரியமான ஒருவருக்காக நீங்கள் செலவு செய்ய நேரலாம்.உங்களிடம் காணப்படும் பதட்டம் காரணமாக உங்கள் தொடைகளில் வலி ஏற்படலாம்.

 

தனுசு

 

இன்று பொறுமையுடன் இருக்க வேண்டியது அவசியம். முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். ஏற்படும் சவால்களை அமைதியுடன் மேற்கொள்ளவும்.பணிகளை முடிப்பதற்கான உங்கள் திட்டங்கள் செயல் வடிவம் பெறும். உங்கள் சக பணியாளர்களை விட நீங்கள் நன்கு பணியாற்று வீர்கள் குடும்ப பிரச்சினை ஒன்றின் காரணமாக உங்கள் துணையை சமாளிப்பது கடினம். நீங்கள் உங்கள் எல்லா வேறுபாடுகளையும் ஒதுக்கி விட்டு நட்புடன் பழக வேண்டும்.இன்று கூடுதல் செலவினங்கள் ஏற்படும். இன்று உங்களால் சேமிக்க இயலாது.உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். கால் வலி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

 

மகரம்

 

இன்று அதிர்ஷ்டகரமான நாள். கடினமான செயல்களையும் உங்கள் திறமை மூலம் எளிதாக முடிப்பீர்கள். இன்று எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலனைத் தரும்.பணி நிமித்தமான பயணங்கள் காணப்படும். அது நற்பலகளைத் தரும். நீங்கள் திறம்பட செயலாற்றுவீர்கள். அது உங்கள் மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும்.உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்குச் சென்று மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள்.இன்று நிதிநிலைமை சிறப்பாக இருப்பதாக உணர்வீர்கள். இன்று போதிய அளவு பணம் சம்பாதிக்க இயலும்.உங்களிடம் காணப்படும் நேர்மறையான சிந்தனை உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். உங்களிடம் காணப்படும் ஆற்றல் உங்கள் ஆரோக்கியத்தில் பிரதிபலிக்கும்.

கும்பம்

 

இன்றைய நாள் நற்பலன்களை அள்ளித் தரும். இன்று உங்கள் தன்னம்பிக்கை உயரும் வகையில் மாற்றங்கள் ஏற்படும். முக்கியமான முடிவுகளை கவனமாக எடுக்கவும்.உங்கள் சக பணியாளர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வதாக உணர்வீர்கள். அவர்களை பொறுமையுடனும் திறமையுடனும் கையாள வேண்டும்.உங்கள் வீட்டில் நடக்கவிருக்கும் ஒரு விழா பற்றிய விஷயங்களை பகிர்ந்து கொள்வீர்கள். அதனை நடத்துவதற்கு பெரியவர்களிடம் ஆலோசனை கேட்பீர்கள். உங்களின் இந்த அணுகுமுறை அவர்களுக்கு திருப்தியை அளிக்கும்.நிதி வளர்ச்சி இன்று சிறப்பாக இருக்கும். உங்கள் சுய தேவைகளுக்காக பணத்தை பயன்படுத்துவீர்கள்.நீங்கள் சிறந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள். இதனால் சிறந்த ஆரோக்கியத்தை பராமரிக்க முடியும்.

 

மீனம்

 

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. உங்கள் தினசரி நவடிக்கையில் கவனமாக இருக்க வேண்டும். பிரச்சினைகளைத் தவிர்க்க உரையாடுவதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து உரையாட வேண்டும். பிரார்த்தனையில் ஈடுபடுவது மன ஆறுதலைத் தரும்.உங்கள் சக பணியாளர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபடுவீர்கள். இதனால் வேலை இழக்க நேரலாம். எனவே எச்சரிக்கையாக செயல்படுவது சிறந்தது.உங்கள் துணையுடன் நட்பு முறையில் பழகுவீர்கள். உங்கள் உணர்சிகளை உங்கள் துணையிடம் வெளிப்படுத்தாதீர்கள்.பணப்புழக்கம் குறைவாக காணப்படும். உங்களின் பிரியமானவர்களின் ஆரோக்கியத்திற்காக பணம் செலவு செய்வீர்கள்.கண்களில் எரிச்சல் ஏற்படலாம். தகுந்த மருத்துவ சிகிச்சை நல்ல பலன் தரும்.
 

ஜோதிட ஆன்மீக தகவல்:
ரூபி அல்லது மாணிக்கம் இந்த கல் நவகிரகத்தில் சூரியனுக்கு உரியது இந்த ரத்தினத்தை ஆண்களும் பெண்களும் வலது கையில் மோதிரவர்கள் அணிய வேண்டும் ஜாதகத்தில் சூரியன் நீச்சமாகவோ அல்லது வக்கிரமாகவோ அமைந்தால் இந்த ரத்தினத்தை அணிவது மிகவும் உத்தமம் இதை வெள்ளி அல்லது தங்கத்தில் செய்து அணியலாம் மற்றும் தந்தை வழி உறவினர்கள் அரசாங்க உத்தியோகம் போன்றவற்றுக்கு இந்த ரத்தினத்தை அணிந்தால் சகல காரியத்திலும் வெற்றி பெறலாம் மீண்டும் நாளை சந்திப்போம் நன்றி வணக்கம்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *