Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 04.02.2024

Advertisements

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு   உகந்த நாளாக இருக்கிறது. உங்கள் தைரியம் காரணமாக வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். மேலும், வெற்றியும் பெறுவீர்கள். கணவன் மனைவி இருவரிடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு  சுமாரான நாளாக இருக்கிறது.  நீங்கள் மனவருத்தத்துடன் காணப்படுவீர்கள். பணியிடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். துணையுடன் பொறுமையாக இருப்பது அவசியம்.  பொறுத்தவரை நிதிநிலை சுமாராக இருக்கும். ஆரோக்கியத்தில் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

 

மிதுனம்

 

மிதுன ராசிக்காரர்கள் பொறுமையாக இருக்க வேண்டிய நாளாக இருக்கிறது.  எதிலும் கவனமாக இருப்பது அவசியம். முக்கியமாக முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பதற்கு நன்கு திட்டமிட வேண்டும். துணையுடன் வன்மையாக நடந்து கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.

கடகம்

 

கடக ராசிக்காரர்களுக்கு  சிறப்பான நாளாக இருக்கும்.  நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்கலாம். பணியிடத்தில் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  பணவரவு அதிகமாக காணப்படும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

 

சிம்மம்

 

சிம்மம் ராசிக்காரர்களுக்கு  சிறப்பான நாளாக இருக்காது.  எதிலும் சிறந்த முறையில் திட்டமிட வேண்டும். முக்கியமாக முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் பணிச்சுமை அதிகமாக காணப்படும். துணையுடன் கடுமையாக நடந்து கொள்வீர்கள். நிதி வளர்ச்சி குறைந்து காணப்படும். மேலும், தேவையற்ற செலவுகள் காணப்படும். ஆரோக்கியத்தில் கண்களில் கவனம் தேவை.

கன்னி

 

கன்னி ராசிக்காரர்களுக்கு  சுமாரான நாளாக இருக்கிறது. சில ஏமாற்றங்கள் காணப்படும். பணியிடச் சூழல் மகிழ்ச்சிகரமாக இருக்காது. துணையிடம் உணர்சிவசப்படுவீகள். பணவரவு கிடைத்தாலும் அதற்கான செலவுகளும் காணப்படும். ஆரோக்கியத்தில் கால்வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

 

துலாம்

 

துலாம் ராசிக்காரர்களுக்கு  சிறப்பான நாளாக இருக்காது.  ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் நற்பலன்களை பெறலாம். பணியிடத்தில் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. மேலும், தவறுகளும் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. துணியுடன் மோதல்கள் காணப்படும்.  நிதிநிலைமை சுமாராக இருக்கும். ஆரோக்கியத்தில் தலைவலி அல்லது கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

 

விருச்சிகம்

 

விருச்சிக ராசிக்காரர்களுக்கு  சிறப்பான நாளாக இருக்கிறது.  நற்பலன்கள் அதிகம் கிடைக்கும். பணியிடத்தில் வளர்ச்சி காணப்படும். வாழ்க்கை துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் பண வரவு கிடைக்க வாய்ப்புளள்து. மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

 

தனுசு

 

தனுசு ராசிக்காரர்களுக்கு  உகந்த நாளாக இருக்காது.  தடைகளையும் கஷ்டங்களையும் சமாளிக்க வேண்டியிருக்கும். பணியிடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். இதனால் குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க முடியாமல் கடினப்படுவீர்கள். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு குறைவாக இருக்கும்.  பணவரவு குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தில் குழப்பமும் தலைவலியும் ஏற்பட வாய்ப்புள்ளது.

 

மகரம்

 

மகர ராசிக்காரர்களுக்கு  சுமாரான  நாளாக இருக்கிறது.  செயல்களை மேற்கொள்வதில் தடைகள் காணப்படும். எந்தவொரு செயலை செய்வதற்கு முன்பாகவும் ஒன்றிற்கு இரண்டு முறை யோசிப்பது நல்லது. பணியிடத்தில் சக பணியாளர்களுடன் வீண் விவாதம் செய்வதை தவிர்க்க வேண்டும். குடும்ப பிரச்சனை ஒன்றின் காரணமாக துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும்.  நிதிநிலைமை சாதகமாக இருக்காது. ஆரோக்கியத்தில் கண்களில் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.

கும்பம்

 

கும்ப ராசிக்காரர்களுக்கு  முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.  குழப்பத்ததுடன் காணப்படுவீர்கள். பணியிடத்தில் பணிகளை முடிக்க தாமதம் ஏற்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு குறைந்து காணப்படும். , கூடுதல் செலவுகள் ஏற்படக்கூடும்.

 

மீனம்

 

மீன ராசிக்காரர்களுக்கு  சாதகமான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் சிறப்பாக பணியாற்றுவார்கள். மேலும், சக பணியாளர்களின் ஆதரவும் கிடைக்கும்.  துணையுடன் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

 

ஜோதிட ஆன்மீக தகவல்:
ரூபி அல்லது மாணிக்கம் இந்த கல் நவகிரகத்தில் சூரியனுக்கு உரியது இந்த ரத்தினத்தை ஆண்களும் பெண்களும் வலது கையில் மோதிரவர்கள் அணிய வேண்டும் ஜாதகத்தில் சூரியன் நீச்சமாகவோ அல்லது வக்கிரமாகவோ அமைந்தால் இந்த ரத்தினத்தை அணிவது மிகவும் உத்தமம் இதை வெள்ளி அல்லது தங்கத்தில் செய்து அணியலாம் மற்றும் தந்தை வழி உறவினர்கள் அரசாங்க உத்தியோகம் போன்றவற்றுக்கு இந்த ரத்தினத்தை அணிந்தால் சகல காரியத்திலும் வெற்றி பெறலாம் மீண்டும் நாளை சந்திப்போம் நன்றி வணக்கம்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *