Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 21.01.2024

Advertisements

மேஷம்

 

உங்கள் செயல் வெற்றியாகும். ஆரோக்கியம் சீராகும். வெளிநாட்டு தொடர்புகள் ஆதாயத்தை உண்டாக்கும் . நீங்கள் திட்டமிட்டிருந்த அனைத்து பணிகளும் நடந்தேறும். செலவிற்கேற்ற வருமானம் ஏற்படும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்பு வரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனை முடிவுக்கு வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் கூடுதலாக கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலக சூழ்நிலை திருப்தி தருவதாக இருக்கும். இன்று நீங்கள் சிவபெருமானை வணங்கி வர இனிமையான நாளாக அமையும்.

ரிஷபம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையை காணப்படும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். பழுதான மின்சார மின்னணு சாதனங்களை மாற்றி புதிதாக வாங்குவீர்கள். தந்தையின் உடல் நலனில் ஆரோக்கியம் தேவை. ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். பணியிடத்தில் இருந்து நெருக்கடி விலகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வெளிநாட்டு வியாபாரத்தில் இருந்த தடை விலகும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வார்கள். சிலருக்கு புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் வரும். இன்று நீங்கள் தக்ஷிணாமூர்த்தியை வழிபட்டு வர மகிழ்ச்சியான நாளாக அமையும்.

 

மிதுனம்

 

இன்று நீங்கள் எதிலும் காண்பீர்கள். உங்கள் எதிரிகள் பணிந்து போவர். அவர்களால் மறைமுக ஆதாயமும் உண்டாகும். எதிர்பாராத பண வரவுக்கும் வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்களாலும் நண்பர்களாலும் ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் சுமை அதிகரிக்கும் என்றாலும்,, சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் மிக சிறப்பாக செய்து, அதிகாரிகளின் பாராட்டுக்களை பெறுவீர்கள். என்று நீங்கள் முருகப்பெருமானை வணங்கி வர இனிமையான நாளாக அமையும்.

கடகம்

 

உங்கள் முயற்சி அனைத்தும் நிறைவேறும். வியாபாரத்தை விரிவு செய்வீர். தொழிலில் இருந்த தடை நீங்கும். நிதிநிலை உயரும். எண்ணம் நிறைவேறும். ஒரு சிலருக்கு புதிய வேலை அமையும். புதிய பொருட்களின் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு பயணங்களும் அதன் மூலம் ஆதாயமும் ஏற்படும். உயர் அதிகாரிகளுடன் பேசும்போது பொறுமையை கடைப்பிடிக்கவும்.
தொழில், வியாபாரம் நன்றாகவே இருக்கும் சக வியாபாரிகள் இணக்கமாக நடந்து கொள்வார்கள். இன்று நீங்கள் வெங்கடாசலபதியே வணங்கி வர சிறப்பான நாளாக அமையும்.

 

சிம்மம்

 

குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். எதிரிகளின் சூழ்ச்சிகளை நீங்கள் முறியடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்கள் உதவியாள் உங்கள் எண்ணம் நிறைவேறும். ஒரு சில செயல்களை யோசிக்காமல் செய்து அதில் லாபம் அடைவீர். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் உற்சாகப்படுத்தும். இன்று நீங்கள் துர்கையை வணங்கி வர மகிழ்ச்சியான நாளாக அமையும்.

கன்னி

 

என்று உங்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் எதிர்ப்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். உங்கள் முயற்சி அனைத்தும் வெற்றியாகும். நீண்ட நாட்களாக தொடர்ந்து வந்த சங்கடம் விலகும். பொருள் சேர்க்கை அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்சனை முடிவுக்கு வரும். வெளி முயற்சி வெற்றியாகும். வாழ்க்கைத் துணையுடன் சங்கடம் ஏற்பட்டு விலகும். சிலருக்கு புண்ணிய தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு உண்டாகும். என்று நீங்கள் அம்பிகையை வணங்கி வர சிறப்பான நாளாக அமையும்.

 

துலாம்

 

குடும்பத்தில் இருந்து சங்கடம் விலகும். பணவரவு கணிசமாக உயரும். புதிய ஆடை ஆபரணங்கள் சேரும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதையும் சாதிக்க வேண்டும் என்று மன உறுதி ஏற்படும். பழைய வாகனத்தை மாற்றி விட்டு புதிய வாகனம் வாங்கும் எண்ணம் தோன்றும். கணவன் மனைவிக்கிடையே அன்னோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். பிரிந்து இருந்த தம்பதி ஒன்று சேர வாய்ப்பு உண்டு. சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். இன்று நீங்கள் சிவபெருமானை வணங்கி வர அருமையான நாளாக அமையும்.

 

விருச்சிகம்

 

உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். நினைத்தவற்றை முடிப்பீர். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். அரசு வழி செயல் ஆதாயம் ஆகும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். புதிய தொழில் தொடங்க எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும்.
தந்தையுடன் இருந்து வந்த மோதல் போக்கு நீங்கி சுமூகமான நிலை ஏற்படும். சிலருக்கு வெளிமாநிலங்களில் உள்ள புகழ்பெற்ற புண்ணிய தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு உண்டாகும். இதுவரை இருந்து உடல் உபாதைகள் நீங்க உடல் ஆரோக்கியம் மேம்படும். என்று நீங்கள் விநாயகரை வணங்கி வர மகிழ்ச்சியான நாளாக அமையும்.

 

தனுசு

 

குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலையை காணப்படும். பிள்ளைகளின் பிடிவாத போக்கு மாறும் அறிவுரைகளை கேட்டு அதன்படி நடப்பார்கள். சிலருக்கு பிள்ளைகள் வழியில் பொருள் வரவுக்கும் வாய்ப்பு உண்டு. உங்கள் செயல்களில் லாபம் உண்டாகும். பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு உண்டாகும். ஒரு சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். திருமண வயதினருக்கு வரன் வரும். அரசு வழி முயற்சி ஆதாயம் ஆகும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு வரும். என்று நீங்கள் பெருமாளை வணங்கி வர சிறப்பான நாளாக அமையும்.

 

மகரம்

 

அனைத்து காரியங்களும் வெற்றி உண்டாகும். பணவரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். வியாபாரம் தொழில் குறித்த சிந்தனை அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி ஒவ்வொன்றும் நிறைவேறும். தொழிலில் உண்டான தடை விலகும் .உங்கள் வருமானம் அதிகரிக்கும். அரசு ஊழியர்களுக்கு இடமாற்றமும் பதவி உயர்வும் ஏற்படும். வெளிநாட்டு முயற்சி வெற்றியாகும். இன்று நீங்கள் சிவபெருமானை வணங்கி வர இனிமையான நாளாக அமையும்.

கும்பம்

 

உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். நெருக்கடி விலகி நன்மைகளை காண்பீர். பிரச்சனைகளை சமாளிக்கும் அளவிற்கு உங்கள் நிலை மாறும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சனை முடிவுக்கு வரும். சிலருக்கு புது வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நவீன ரக மின்சார மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். நண்பர்கள் மூலம் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் ஏற்படக்கூடும். என்று நீங்கள் தக்ஷிணாமூர்த்தியை வழிபட சிறப்பான நாளாக அமையும்.

 

மீனம்

 

மீஇன்று உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் இருந்து நெருக்கடி வளகும். வருமானம் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் விருத்தியாகும். அரசு வழி செயல்களில் ஆதாயம் உண்டாகும் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். இன்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்ப சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். என்று நீங்கள் பைரவரை வணங்கி வர சிறப்பான நாளாக அமையும். மீண்டும் நாளை சந்திப்போம் அதுவரை நன்றி வணக்கம்.
ஜோதிட ஆன்மீக தகவல்:
ரூபி அல்லது மாணிக்கம் இந்த கல் நவகிரகத்தில் சூரியனுக்கு உரியது இந்த ரத்தினத்தை ஆண்களும் பெண்களும் வலது கையில் மோதிரவர்கள் அணிய வேண்டும் ஜாதகத்தில் சூரியன் நீச்சமாகவோ அல்லது வக்கிரமாகவோ அமைந்தால் இந்த ரத்தினத்தை அணிவது மிகவும் உத்தமம் இதை வெள்ளி அல்லது தங்கத்தில் செய்து அணியலாம் மற்றும் தந்தை வழி உறவினர்கள் அரசாங்க உத்தியோகம் போன்றவற்றுக்கு இந்த ரத்தினத்தை அணிந்தால் சகல காரியத்திலும் வெற்றி பெறலாம் மீண்டும் நாளை சந்திப்போம் நன்றி வணக்கம்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *