Today Rasi Palan -இன்றைய ராசிபலன் – 13.09.2024

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்

சென்னை:இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் ஆவணி மாதம் 28-ந் தேதி வெள்ளிக்கிழமை.

நட்சத்திரம்: இன்று இரவு 6.21 வரை பூராடம் பின்பு உத்ராடம்

திதி: இன்று இரவு 6.11 வரை தசமி பின்பு ஏகாதசி

யோகம் : சித்தயோகம்

நல்ல நேரம் காலை : 09.15 – 10.15

நல்ல நேரம் மாலை : 4.45 – 5.45

ராகு காலம் காலை : 10.30 – 12.00

எமகண்டம் மாலை : 3.00 – 4.30

குளிகை காலை : 7.30 – 9.00

சூலம் : மேற்கு

சந்திராஷ்டமம் : ரிஷபம், மிதுனம்

இன்றைய ராசிபலன்:

மேஷம்


உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில் ரீதியாக எடுத்த புது முயற்சி கைகூடும்.

 

ரிஷபம்


திட்டமிட்ட காரியங்கள் திசை மாறிச் செல்லும் நாள். யோசித்தும், இறைவனைப் பூஜித்தும் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

மிதுனம்


மனக்கசப்பு மாறி மகிழ்ச்சி கூடும் நாள். வாக்கு சாதுர்யத்தால் வளம் காண்பீர்கள். அலுவலகப்பணிகளில் அருகில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வீக சிந்தனை மேலோங்கும்.

கடகம்


அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். உத்தியோகத்தில் சம்பள உயர்வுபற்றிய சந்தோஷத் தகவல் கிடைக்கும். உறவினர் வழியில் அன்புத் தொல்லைகளைச் சந்திக்க நேரிடலாம்.

சிம்மம்


மனக்குழப்பம் ஏற்படும் நாள். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்துசேரலாம். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற இயலாது. உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.

கன்னி


வருமானம் உயரும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். சொந்தபந்தங்கள் தொடர்பான சில விஷயங்களில் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.

துலாம்


வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தி யாகும் நாள். பிள்ளைகளின் கல்விக்காக எடுத்த முயற்சி வெற்றி பெறும். இடம் சம்பந்தமான பிரச்சினைகள் சுமூகமாக முடியலாம். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

விருச்சிகம்


தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். புதிய வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். பெற்றோர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். தொழில் தொடர்பான முக்கியபுள்ளிகளை சந்தித்து பேசும் வாய்ப்பு உண்டு.

தனுசு


யோகமான நாள். வெளிவட்டார தொடர்பு விரிவடையும். நீங்கள் செய்த உதவிக்குப் பதில் உதவி கிடைக்கும். சகோதர வழியில் சுபச்செய்தியொன்று வந்துசேரலாம். வீட்டைச் சீரமைக்கும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மகரம்


மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மனதளவில் நினைத்த காரிய மொன்றை செயல்படுத்த முன்வருவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. வழக்குகள் சாதகமாகும்.

கும்பம்


ஏமாற்றங்கள் அகல எதிலும் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவைப் படும் நாள். தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

மீனம்


நினைத்த காரியம் நிறைவேறும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும். குடும்பத்தில் கல கலப்பான சூழ்நிலை உருவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *