Advertisements

தமிழ்நாடு சட்டப்பேரவையில் உணவு மற்றும் கூட்டுறவுத் துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதம் இன்று நடைபெறுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நான்காவது நாளாக இன்று மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. இதில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடக்கிறது. இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு உரையாற்றுவார்கள்.
இதைத்தொடர்ந்து, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணன், கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் ஆகியோர் பதில் அளித்து உரையாற்றுவார்கள். நிறைவாக, இருவரும் துறைச் சார்ந்த புதிய அறிவிப்புகளையும் வெளியிடுவார்கள்.
Advertisements


