
வங்கதேச அணி வெற்றி!
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கோப்பை கடந்த 5ம் தேதி உற்சாகமாகத் தொடங்கியது. நவம்பர் 19ம் தேதிவரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்தப் போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெற்றி பெற்றன.
இந்நிலையில் இன்று உலகக்கோப்பையின் மூன்றாவது லீக் போட்டியில்ஆப்கானிஸ்தான் அணியை வங்கதேச அணி எதிர்கொண்டது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக, டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணி, 37.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இதில் வங்கதேசம் அணி சார்பில் ஷகிப் அல் ஹசன் மற்றும் மெஹிதி ஹாசன் ஆகியோர் தல 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.அதனைத் தொடர்ந்து156ரன்களை இலக்காக எடுத்தால் வெற்றி என்று விளையாடிய வங்கதேசம் அணி வீரர்கள்அதிரடியாக விளையாடினர். முடிவில் 35 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 156ரன்களை எடுத்து வங்கதேசம் அணி வெற்றி பெற்றது.




