
டிஎன்பிஎல் தொடரில், கோவையை வீழ்த்தி, மதுரை முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
டிஎன்பிஎல் தொடரின் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் கோயம்புத்தூரில் நடந்து வருகின்றன. இந்நிலையில், கோவையில் நேற்று நடைபெற்ற 8-வது லீக் ஆட்டத்தில், லைகா கோவை கிங்ஸ், சியாச்செம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய கோவை அணி, 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 170 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய மதுரை பாந்தர்ஸ் அணி, 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 17.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் மதுரை பாந்தர்ஸ் நடப்பு தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.


