
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலைக் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
பொன்னேரியில் துரை சந்திரசேகரனும், வேளச்சேரியில் அசன் மவுலானாவும், திருப்பெரும்புதூரில் செல்வப்பெருந்தகையும், சோளிங்கரில் முனிரத்தினமும், ஊத்தங்கரையில் குப்புசாமியும் போட்டியிடுகின்றனர். கிருஷ்ணகிரி செல்லக்குமாரும், பெண்ணாகரத்தில் தமிழ்க்குமரனும், ஆத்தூர் அர்த்தநாரியும், ஈரோடு கிழக்குத் தொகுதியில் கோபிநாத் பழனியப்பனும், உதகமண்டலத்தில் இராமச்சந்திரனும் போட்டியிடுகின்றனர்.
கவுண்டம்பாளையத்தில் சூரியபிரகாஷ், சிங்காநல்லூரில் ஸ்ரீநிதி நாயுடு, துறையூரில் விச்சு லெனின் பிரசாத், கடலூரில் சந்திரசேகரன், மயிலாடுதுறையில் ஜமால் யூனுஸ் முகமது ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அறந்தாங்கியில் இராமச்சந்திரனும், காரைக்குடியில் மாங்குடியும், உசிலம்பட்டியில் சரவணகுமாரும், சிவகாசியில் கணேசன் அசோகனும், திருவாடானையில் இராம கருமாணிக்கமும் போட்டியிடுகின்றனர்.
திருவைகுண்டத்தில் ஊர்வசி அமிர்தராஜ், சங்கரன்கோவிலில் சங்கை கணேசன், அம்பாசமுத்திரத்தில் துரை, நாங்குநேரியில் ரூபி மனோகரன், குளச்சலில் தாரகை குத்பர்ட், விளவங்கோட்டில் பிரவீன், கிள்ளியூரில் ராஜேஷ்குமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.



