tn rain:30 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை:மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில். தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கடலூர், சேலம், கோவை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், நீலகிரி, திருப்பூர், அரியலூர், நாகை, திருவண்ணாமலை, பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, திருச்சி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *