
அண்ணா நகரில் மதியம் 12 மணியிலிருந்து 1 மணிவரை 9 செ.மீ. மழை பெய்துள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அண்ணாநகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், வில்லிவாக்கம், பாடி, அம்பத்தூர், கொரட்டூர், வளசரவாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பகுதிகளில் 1 மணி நேரத்திற்கும் மேலாகக் கனமழை பெய்தது.
இந்நிலையில், அண்ணா நகரில் மதியம் 12 மணியிலிருந்து 1 மணிவரை 9 செ.மீ. மழை பெய்துள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், மணலி, கொளத்தூர், பெரம்பூர், அமைந்தகரை ஆகிய பகுதிகளில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது.
நேற்று வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், சென்னையில் கனமழை எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



