America:துப்பாக்கி சூடு – 4 பேர் பலி!

Advertisements

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

வாஷிங்டன்:அமெரிக்காவின் அலபாமா மாகாணம் பர்மிங்கம் நகரில் கேளிக்கை விடுதி உள்ளது. இந்தக் கேளிக்கை விடுதிக்கு வெளியே நேற்று இரவு பலர் நின்றுகொண்டிருந்தனர்.

அப்போது, அங்குக் காரில் வந்த கும்பல் விடுதி அருகே நின்றுகொண்டிருந்தவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கி சூடு நடத்தியது. இந்தச் சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 18 பேர் காயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடிய கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *