
காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தித் திருப்பூரில் போக்குவரத்து பணிமனை முன்பாக அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூரில் போக்குவரத்து பணிமனை முன்பாக அண்ணா போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பூர் காங்கேயம் சாலை சி டி சி கார்னர் பகுதியில் உள்ள போக்குவரத்து பணிமனை முன்பாக அண்ணா போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசும், போக்குவரத்து துறையும் 15வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை இனியும் காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், புதிய ஓட்டுநர்கள், நடத்துனர்களை பணியமர்த்திட வேண்டும், போக்குவரத்து தொழிலாளர்களுக்குத் தரமான உணவை வழங்கிட வேண்டும்,
போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக்கி ஆணை இட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திக் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அண்ணா தொழிற்சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

