Tirunelveli:நீட் பயிற்சி மையத்தில் சித்திரவதை; மாணவிமீது காலணியை வீசியக் கொடூரம்!

Advertisements

திருநெல்வேலியில் தனியார் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களை வன்கொடுமை செய்த வழக்கில், பயிற்சி மைய உரிமையாளர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களைப் பிரம்பால் கண்மூடித் தனமாக அடித்ததோடு மட்டுமின்றி, காலணியை வாசலில் முறையாகக் கழற்றி போடவில்லை எனக்கூறி, காலணியை மாணவி ஒருவர் மீது வீசிய ஜல் நீட் பயற்சி மைய உரிமையாளர் ஜலால் அகமது மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியான நிலையில், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இதுகுறித்து வெளியான வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜல் நீட் பயிற்சி மையத்தின் மீது புகார் வந்த நிலையில், பெற்றோரின் சிரமத்தைக் குழந்தைகள் உணர்வதில்லையென நீட் பயிற்சி மையம் விளக்கம் அளித்துள்ளது.

ஒவ்வொரு மாணவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணை முடிவுக்குப் பிறகே விரிவான விவரங்கள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

2 ஆண்டுகளாக இந்த நீட் பயிற்சி மையம் இயங்கி வருவதாகவும் அங்கு 80 மாணவர்கள் படித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதேபோல இதன் கிளை கடையநல்லூரில் செயல்பட்டு வருவதாகவும் அங்கு 50 – 80 மாணவர்கள் படித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *