Tiruchendur:சந்தணமாரி அம்மன் கோவில் கொடை விழா..பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு!

Advertisements

திருச்செந்தூர்:திருச்செந்தூர் நாடார் தெரு சந்தணமாரி அம்மன் கோவில் கொடை விழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர்.

சந்தணமாரி அம்மன் கோவில்

திருச்செந்தூர் நாடார் தெரு சந்தணமாரி அம்மன் கோவில் கொடை விழா கடந்த 11-ந் தேதி தொடங்கியது. அன்று இரவு ஜெய விநாயகர்க்கும், சந்தணமாரி அம்மனுக்கு மாக்காப்பு அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் இரவு ஜெய விநாயகருக்கும், சந்தணமாரி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமாகி தீபாரானை நடந்தது.

பால்குடம் ஊர்வலம்

கொடை விழாவின் முக்கிய நாளான நேற்று காலை 9 மணிக்கு ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். பால்குடம் எடுத்த பக்தர்கள் கோவில் முன்பு இருந்து ஊர்வலமாக முக்கிய வீதிகளில் வலம் வந்து மீண்டும் கோவிலுக்கு வந்தனர். பின்னர் சந்தணமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாரானை நடந்தது. பின்னர் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு 7 மணிக்கு முளைப்பாரி வீதி உலா நடந்தது. இரவு 12 மணிக்குச் சந்தணமாரியம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. கொடை விழா காலங்களில் பக்தர்களுக்குக் காலை, மாலை மற்றும் இரவு ஆகிய மூன்று நேரமும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *