Thoothukudi Fishermen Strike: அத்துமீறும் கேரள மீனவர்கள்.. தூத்துக்குடி மீனவர்கள் வேலைநிறுத்தம்!

Advertisements

தூத்துக்குடி: கேரள மீனவர்கள் தமிழக கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடிப்பதை தடுக்க வலியுறுத்தித் தூத்துக்குடி விசைப்படகு மீனவர்களும், தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து நாள்தோறும் அதிகாலை புறப்படும் விசைப்படகுகள் கடலில் மீன்பிடித்து விட்டு இரவு 9 மணிக்குள் கரைக்கு திரும்பிவிடும்.

கடந்த சில மாதங்களாக விசைப்படகுகள் கரை திரும்பியதும் கேரள மீனவர்கள் அத்துமீறித் தமிழக பகுதியில் நுழைந்து இரவில் மீன்பிடிப்பதாகத் தூத்துக்குடி மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் காலைக் கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு மீன் கிடைக்காமல் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.

கேரள மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்க வலியுறுத்தித் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து செல்லும் விசைப்படகு மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். உடனடியாக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தி தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். வேலை நிறுத்தம் காரணமாகத் துறைமுகத்திலேயே நூற்றுக்கணக்கான படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

உடனடியாக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தி தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். வேலை நிறுத்தம் காரணமாகத் துறைமுகத்திலேயே நூற்றுக்கணக்கான படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *