Thol. Thirumavalavan: அண்ணாமலை பருப்பு வேகாது.. வம்பிழுத்த திருமாவளவன்.!

Advertisements

எத்தனை அண்ணாமலை வந்தாலும் தமிழ்நாட்டில் உங்கள் பருப்பு வேகாது என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் புயல் மழை வெள்ளத்தை தீவிர பேரிடராக அறிவிப்பு செய்து ரூபாய் 21 ஆயிரம் கோடி நிவாரண நிதி வழங்கிட வேண்டும், 2024 நாடாளுமன்ற பொது தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தலைமையில் இந்தக் கவன இயக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் ஊடகத்துறை மாநில தலைவர் கோபண்ணா, மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன், அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மேடைபேச்சு:-தமிழ்நாட்டில் பாஜக இல்லை என்பதால் தான்  நமது கோரிக்கைகளை ஏற்க ஒன்றிய அரசு மறுக்கிறது.இந்திய ஒன்றிய பாஜக அரசு அலட்சியமாக எகத்தாலமாகத் தமிழ்நாட்டை அனுகுகிறது.

சென்னையில் பெய்த மழையில் இரண்டு நாட்கள் மின்சாரம் இல்லாமல் நானும் சிக்கித் தவித்தேன், எனக்கே முத்துமாரியம்மன் கோவிலில் சமைத்த சாம்பார் சாதம் தான் கிடைத்தது.இவ்வளவு பெரிய பாதிப்பைத் தனிநபராலோ, கட்சியாலோ ஈடு செய்ய முடியாது எனவே தான் ஆட்சியாளர்களை நிவாரண நிதி கேட்கிறோம்.

வரி வசூல் செய்து ஒன்றிய அரசுக்கு அதிகமான வருமானம் ஈட்டும் நான்கு மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று, ஆனால் தமிழ்நாட்டிற்கு செய்ய வேண்டிய திட்டங்களில் ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது

தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை பாதிப்பைத் தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று அதிகார மமதியில் பேசுகிறார் நிர்மலா சீதாராமன். தன்னை ஒரு பிரதமர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் நிர்மலா சீதாராமன்.

தமிழ்நாடு வெறுப்பு அரசியலுக்கும் சனாதனவாதிகளுக்கும் எதிரான மண்.எத்தனை அண்ணாமலை வந்தாலும் தமிழ்நாட்டில் உங்கள் பருப்பு வேகாது என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.மழை வெள்ள பாதிப்பைப் பேரிடராக அறிவிக்க முடியாது என்பது மக்கள் விரோத போக்கை வெளிப்படுத்துகிறது.

மழை வெள்ள பாதிப்புகளுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் விடுத்த கோரிக்கையை ஏற்று 21,000 கோடி ரூபாயை ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் ஆபத்தை அறிஞர்கள் பேசுகிறார்கள் ஆனால் சாதாரண மக்களுக்குத் தெரியவில்லை எனவே சாதாரண மக்களுக்கும் இதன் விளைவைக் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சியை வளர்ச்சி நோக்கில் வரவேற்க கடமைப்பட்டிருக்கிறோம்.நாடாளுமன்ற ஜனநாயகத்தின் வெளிப்படைத் தன்மை இதில் உறுதிப்படுத்த படுகிறதா என்றால் நிச்சயமாக இல்லை.

எலக்ட்ரானிக் என்பது எவ்வளவு வலிமையானதோ அவ்வளவு பலவீனங்களையும் கொண்டது.
வாக்குச்சீட்டு முறையைத் தவிர்த்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்குப் பதிவு முறை  தில்லுமுல்லு வேலைகளைச் செய்ய வழிவகுக்கும்.

190க்கும் மேற்பட்ட நாடுகளைக் கொண்ட உலகில் வெறும் 25 நாடுகளில் மட்டும் தான் மின்னணு வாக்குப்பதிவு முறை உள்ளது, அதில் இந்திய உள்பட நான்கு நாடுகள் மட்டும் தான் நூறு விழுக்காடு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை நடைமுறைப்படுத்துகிறது.

வல்லரசு நாடுகள் கூட மின்னணு வாக்குப்பதிவு முறையை நடைமுறைப்படுத்தவில்லை.வாக்குச்சீட்டு முறை எண்ணிக்கைக்கு நாட்கள் கூடுதலாக ஆகும் என்றால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் vvpad இனம் ஒப்புகை சீட்டுப் பதிவை 100% வைத்திருக்க வேண்டும்.

பெரும்பான்மை என்னும் பெயரால் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அரசியலை பரப்புகிறார்கள்.
இந்துக்களை மேல் சாதிகீழ் சாதி என்று சாதி அடிப்படையில் பிரிக்கிறார்கள். சாதிப் பெருமையைப் பேசுபவர்களைச் சந்தித்து அவர்களுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள்.

நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதன்மையாக 150 எம்.பி க்களை இடைநீக்கம் செய்துள்ளனர்.
கே ஆர் நாராயணன் மாதிரி ராம்நாத் கோவிந்தும், திரௌபதி முர்மு அவர்களும் இல்லை, அவர் இருந்திருந்தால் என்னை அழைக்காமல் நாடாளுமன்றத்தை திறக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பி இருப்பார். கே ஆர் நாராயணன் ஒரு அம்பேத்கர்யவாதி.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைத் தடுக்க இந்தியா கூட்டணிமூலம் நாடு முழுவதும் பரப்புரை செய்ய விடுதலை சிறுத்தைகள் கட்சி மிகப்பெரும் உந்துதலை தரும்.சனவரி 26, விசிக சார்பில் திருச்சியில் நடைபெற உள்ள வெல்லும் சனநாயகம் மாநாடு இந்த நாட்டைக் காப்பதற்கான ஒரு அறப்போர் எனத் திருமாவளவன் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *