
திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் இன்று ஆடிப்பூரம் ஒட்டி மூலவருக்கு அதிகாலை 4 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது தொடர்ந்து தங்கவேல் தங்க கிரீடம் மற்றும் பச்சை மாணிக்க, மரகதக், வைர ஆபரணங்கள் அணிவித்து மகாதீபாராதனை நடந்தது.
தொடர்ந்து காலை 10 மணி அளவில் காவடி மண்டபத்தில் உச்சவருக்கு பாலபிஷேகம் நடந்தது. இந்த விழாவில் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் மலர் மயில் காவிரிகளுடன் வந்து வழிபட்டனர் மேலும் சில பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற பால்குடம் எடுத்தும் உடல் முழுவதும் அலகு குத்தியும் தங்களது நேத்து கடனை செலுத்தினர்.
மேலும் இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொது வழி மற்றும் 100 ரூபாய் சிறப்பு தரிசனத்தில் நீண்ட வரிசையில் நின்று மூலவரை தரிசித்தனர் திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

