Thiruparankundram : நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உள்ளிட்ட 133 பேர் வழக்குப்பதிவு.!

Advertisements

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 113 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதுரை திருப்பரங்குன்றத்தில் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த 144 தடை உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மலையில் தீபம் ஏற்றவும் உத்தரவிட்டார்.

இதனைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 113 பேரை கைது செய்த காவல் துறையினர், சில மணி நேரங்களில் விடுவித்தனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் எச்.ராஜா, இந்து மக்கள் கட்சி ஆலய பாதுகாப்பு குழுவினர் உள்பட 113 பேர் மீது சட்டவிரோதமாக போராட்டத்தில் ஈடுபட்டது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *