
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியும், பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வீவரும் இரு நாடுகளிடையே பல துறைகளில் உள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாகப் பேச்சு நடத்தியுள்ளனர்.
பெல்ஜியம் நாட்டின் பிரதமர் பார்த் டி வீவர் இந்தியாவுக்கு அரசு முறைப் பயணமாக வந்துள்ளார். தில்லி விமான நிலையத்தில் அவரைப் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் சஞ்சய் சேத் வரவேற்றார்.
தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்குச் சென்ற பெல்ஜியம் பிரதமர் அங்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அங்குள்ள வருகைப் பதிவேட்டிலும் கையொப்பமிட்டார்.
தில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியும், பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வீவரும் சந்தித்துப் பேசினர். இரு நாடுகளிடையே பல துறைகளிலும் இப்போதுள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் விரிவாகப் பேச்சு நடத்தினர்.



