Theft: தனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியை வீட்டில் திருடிய வாலிபர்!

Advertisements

திருநின்றவூரில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில், பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியை வீட்டில் திருடிய வாலிபர் கைதானார்.=

ஆவடி:திருநின்றவூரில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில், பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியை வீட்டில் திருடிய வாலிபர் கைதானார். அவரிடமிருந்து 24 பவுன் நகை மீட்கப்பட்டது. ஆவடியை அடுத்த திருநின்றவூர் தாசர் புரம் 3-வது தெருவைச் சேர்ந்தவர் கிருபை ஜான் (வயது 58). இவரது மனைவி தீபம் (55). இவர்கள் இருவரும் அந்தப் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர்களாகப் பணிபுரிந்து வருகிறார்கள்.

கடந்த மாதம் 27-ந்தேதி மர்மநபர்கள் இவர்களது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து 40 பவுன் நகை, ரூ.30 ஆயிரத்தை திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

பினனர் சம்பவம் தொடர்பாகத் திருநின்றவூர் சுதேசி நகர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சத்யா (20) என்பவரைப் போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது, ஆசிரியை தீபத்திடம் அதே பள்ளியில் சத்யா 7-ம் வகுப்புவரை படித்துள்ளார். தனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியை வீடு என்று தெரியாமல் திருடியதாகப் போலீசாரிடம் அவர் தெரிவித்தார். கைதான சத்யாவிடமிருந்து 24.5 பவுன் நகை, 25 கிராம் வெள்ளி, 2 செல்போன்கள், ரூ.60 ஆயிரத்து 610 பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். சத்யா ஏற்கனவே ஒரு திருட்டு வழக்கில் சிறைக்கு சென்று கடந்த மாதம் 23-ந்தேதி தான் சிறையிலிருந்து வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *