ராட்டி வீடியோ பாடலைப் வெளியிட்ட படக்குழு!

Advertisements

Partner Movie Tamil

‘பாட்னர்’திரைப்படத்தின் ராட்டி வீடியோ பாடலைப் படக்குழு வெளியிட்டுள்ளது…

சென்னை :அறிமுக இயக்குனர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பாட்னர்’. இதில் ஆதி, ஹன்சிகா மோத்வானி, பாலக் லால்வானி, யோகி பாபு, பாண்டியராஜன், ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஷபீர் அகமது ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். நகைச்சுவையை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ராயல் ஃபார்ச்சூனா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் கோலி சூரிய பிரகாஷ் தயாரித்துள்ளார். இந்நிலையில் பாட்னர் படத்தில் இடம்பெற்றுள்ள ராட்டி என்ற வீடியோ பாடலைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

Partner Movie Tamil

இந்தப் பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் பாடல் 5 வருடத்திற்கு முன்பு 7அப் மெட்ராஸ் ஆல்பத்திற்காகச் சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருந்தது குறிப்பிதக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *