Puducherry Beach Road: விழிப்புணர்வு குழுவை வாழ்த்தி அனுப்பிய அமைச்சர்!

Advertisements

சித்த மருத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு மாநிலங்களுக்குச் செல்லும் குழு புதுவை வந்த நிலையில் அவர்களை அமைச்சர் லட்சுமி நாராயணன் வரவேற்று வாழ்த்தி வழி அனுப்பினார்.

இந்திய அரசின் ஆயுஷ் துறையின் கீழ் இயங்கும் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம் மற்றும் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் சார்பில் சித்த மருத்துவ விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணி கடந்த 24ஆம் தேதி டெல்லியில் தொடங்கியது.

இணையமைச்சர் முஞ்சபாரா மகேந்திரபாய் துவக்கி வைத்த இந்தப் பேரணியில் சித்த மருத்துவர்கள், ஆராய்ச்சி அலுவலர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களைச் சார்ந்த பணியாளர்கள் 22 பேர் புது தில்லியில் துவங்கி கன்னியாகுமரி வரை 3,333 கிலோ மீட்டர் இருசக்கர வாகனத்தில் பயணித்து மக்களிடையே சித்த மருத்துவத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதனிடையே சென்னை வழியாகப் புதுச்சேரி கடற்கரை சாலைக்கு வந்த இக்குழுவினரை, சுற்றுலா துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் வரவேற்று வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி சித்த மருத்துவ மண்டல ஆராய்ச்சி நிலையத்தைச் சார்ந்த ஆராய்ச்சி அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *