Leo FDFS: ஜோடி நிச்சயம் செய்துகொண்ட சுவாரஸ்யம்!

Advertisements

லியோ முதல் காட்சியைப் பார்க்க வந்த ஜோடி நிச்சயம் செய்துகொண்ட சுவாரஸ்யம்!

லியோ படத்தின் முதல் காட்சியைப் பார்க்க வந்த ரசிகர் ஒருவர் தியேட்டரிலேயே தன் காதலிக்கு மோதரம் அணிவித்து திருமண நிச்சயம் செய்துகொண்டார்.

நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் தமிழகம் முழுவதும் இன்று காலை 9 மணிக்கு ரிலீஸ் ஆனது. அப்படத்தை ரசிகர்கள் திருவிழாபோல் கொண்டாடி வருகின்றன. புதுக்கோட்டையில் லியோ படம் ரிலீசான தியேட்டரில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறி உள்ளது. நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர், தியேட்டரில் வைத்துத் தனது காதலியைக் கரம்பிடித்து உள்ளார். இருவரும் தியேட்டரில் மோதரம் மாற்றித் திருமணம் நிச்சயம் செய்துகொண்டனர்.

நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரான புதுக்கோட்டை சேர்ந்த வெங்கடேஷ், மஞ்சுளா என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இந்த ஜோடி தான் இன்று லியோ முதல் காட்சியின்போது திருமண நிச்சயம் செய்துகொண்டனர். இதுகுறித்து பேசிய வெங்கடேஷ், தனக்கு தாய், தந்தை இருவருமே கிடையாது, விஜய் தான் தனக்கு எல்லாமே. அதனால் தான் அவர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்க மாவட்டத்தலைவர் முன்னிலையில் இந்தத் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. லியோ படத்தின்போது தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் எனத் தான் 8 மாதமாகக் காத்திருந்து இன்று நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாகவும், நாளைத் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் விஜய்யின் தீவிர ரசிகரான வெங்கடேஷ் கூறினார்.

நடிகர் விஜய் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்த முறைப்படி இன்று மோதிரம் மாற்றித் திருமணம் செய்துகொண்டதாகவும், நாளைப் பெருமாள் கோவிலில் தங்களது திருமணம் நடைபெறும் என்றும் வெங்கடேஷ் தெரிவித்தார். லியோ படம் ரிலீசான தியேட்டரில் திருமண நிச்சயம் செய்துகொண்ட வெங்கடேஷ் – மஞ்சுளா ஜோடிக்கு அங்குப் படம் பார்க்க வந்த ரசிகர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *