
கரூரில் நடைபெற்ற பட்ஜெட் விளக்கப் பொதுக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உரையாற்றும்போது, அவர் உதயநிதி ஸ்டாலினை ஒருமையில் விமர்சித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, “பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தால், நாங்கள் முதலில் கோ பேக் மோடி என்று கூறினோம். இனி நாங்கள் கெட் அவுட் மோடி என்று கூறுவோம்” என உதயநிதி தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு நான் கூறுகிறேன்… நீ சரியான ஆளாக இருந்தால்… நீ சரியான ஆளாக இருந்திருந்தால்… உன் வாயிலிருந்து கெட் அவுட் மோடி என்ற வார்த்தை வெளிவரட்டும்… எங்கப்பா முதலமைச்சர்… தாத்தா ஐந்து முறை முதலமைச்சர் என நீ கூறினால், அது எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.
உன் வாயிலிருந்து எங்குத் தாத்தா ஐந்து முறை முதல்வர்… எங்கப்பா சிட்டிங் முதல்வர். நான் துணை முதல்வர் என்று நீ கூறினால், அது எப்படி இருக்கும் என்று பார்ப்போம்” என அண்ணாமலை தெரிவித்தார்.
எதிர்ப்புகள் தற்போது எழுந்து வருகின்றன.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது,
அண்ணாமலை சுயநினைவற்றவரைப் போலவே செயல்படுகிறார்.
அரசியல் அரைவேக்காடு, முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை ஒரே நேரத்தில் பேசுவது அரசியல் அநாகரீகத்தின் உச்சமாகும்.
நாவடக்கம் இல்லாதவர், அநாகரீகமானவர் என்பதைக் தொடர்ந்து நிரூபித்து வரும் அண்ணாமலை, மக்களிடம் அம்பலமாக இருக்கிறார் என்பது நிதர்சனம்.
ஷூ கால்களுடன் வலம் வருவது, செருப்பு இல்லாமல் நடக்கிறேன் எனக் கூறுவது, சாட்டையால் அடித்துக் கொண்டதை நாடே எள்ளி நடையாடுகிறது.
கார்ப்பரேட் மற்றும் ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாக அரசியல் செய்யும் அண்ணாமலைக்கு திராவிட மாடல்பற்றிப் பேசுவதற்கு தகுதி இல்லை.
