உளவுத்துறை ரிப்போர்ட்டால் அதிருப்தி.! சில அமைச்சர்களின் பதவி பறிப்பு.?

சட்டசபை தேர்தலில் 108 இடங்களை அள்ளிக் குவித்து, கூட்டணி தோழர்களின் ஆதரவோடு உருவான ‘TVK Cabinet’ ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து சில மாதங்களே ஆகின்றன. “ஊழலோ, சர்ச்சையோ இருந்தால் முகத்தைப் பார்க்காமல் தூக்கி அடிப்பேன்” என்று பதவியேற்ற நாளில் விஜய் கொடுத்த எச்சரிக்கை மணி, இன்று பல அமைச்சர்களின் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது…

தமிழ்நாட்டில் மின்வெட்டு பிரச்னை , விலைவாசி உயர்வு , உளவுத்துறையின் இரகசிய ரிப்போர்ட், மற்றும் நீதிமன்றச் சர்ச்சை என அடுத்தடுத்து அமைச்சரவையில் குளறுபடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.. இந்நிலையில் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் அமைச்சர்களின் பதவி பறிபோக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது..

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ‘அதிரடி ஸ்டைலில்’ தூக்கப்போகும் அந்தப் ‘பிளாக் லிஸ்ட்’ அமைச்சர்கள் யார்? தவெக வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ள அந்த முழு பின்னணி என்ன..இது பற்றி விரிவாக பார்க்கலாம்..!

லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னைக்குத் திரும்பிய கையோடு, ஓய்வெடுக்கக்கூட நேரம் ஒதுக்காமல் உடனடியாகத் தலைமைச் செயலகத்திற்கு விரைந்து அதிகாரிகளுடனும் அமைச்சர்களுடனும் தீவிர ஆய்வுக் கூட்டங்களை நடத்தினார் முதல்வர் விஜய். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

அதைத் தொடர்ந்து காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயுஎம்எல் போன்ற தோழமைக் கட்சிகள் மற்றும் அதிமுகவிலிருந்து இணைந்த உறுப்பினர்களின் ஆதரவோடு ஆட்சிப் பொறுப்பேற்றது. புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உட்பட 9 அமைச்சர்களுடன் தொடங்கப்பட்ட இந்த ‘TVK Cabinet’, பின்னர் கூட்டணிக் கட்சியினரையும் இணைத்துக் கொண்டு விரிவடைந்தது.

ஆட்சிப் பொறுப்பேற்ற தொடக்கத்திலேயே, “ஊழல் குற்றச்சாட்டுகளுக்கோ அல்லது தேவையற்ற சர்ச்சைகளுக்கோ ஆளானால், எவர் என்றும் பார்க்காமல் உடனடியாகப் பதவியை விட்டுத் தூக்கிவிடுவேன்” என்று தனது அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இருப்பினும், அண்மைக்காலமாக சரத், ஜெகதீஸ்வரி, கீர்த்தனா, பார்த்திபன், நிர்மல்குமார் உள்ளிட்ட சில அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதற்கிடையே நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலும் சில அமைச்சர்களின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்ற அதிருப்தி முதல்வருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும், தொடரும் மின்வெட்டு, கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு, தனிநபர் விமர்சனங்கள் மற்றும் சமூகத்தை அச்சுறுத்தும் போதைப்பொருள் பிரச்சனை போன்றவை முதல்வர் விஜய்யை மிகுந்த மன உளைச்சலுக்கும் அதிருப்திக்கும் ஆளாக்கியுள்ளன. இதோடு மட்டுமன்றி, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் பக்தர்களுக்கு ஏற்பட்ட நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு நேர்ந்ததாகக் கூறப்படும் அவமானச் சம்பவம் ஆகிய நிகழ்வுகள் அரசின் மீது கெட்ட பெயரை ஏற்படுத்தியதால் முதல்வர் தீவிர கோபமடைந்துள்ளார்.

இந்தச் சூழலில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் அதிரடி நடவடிக்கைகளை எடுக்க விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக உளவுத்துறை மூலம் ஒவ்வொரு அமைச்சரின் நடவடிக்‌கைகள், சந்திப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த முழுமையான ரகசிய அறிக்கையை முதல்வர் தனது கைவசம் வாங்கி வைத்துள்ளார். தற்போது இடைத்தேர்தல் நேரம் என்பதால் அவசரப்படாமல், தேர்தல் முடிந்த கையோடு அமைச்சரவையை முழுமையாக மாற்றியமைக்க அவர் முடிவெடுத்துள்ளார்.

இதில் சிலரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்படலாம், சிலருக்குத் துறைகள் மாற்றப்படலாம் மற்றும் சில புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்று தெரிகிறது. இதனால், தவெக மற்றும் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ-க்கள் பலரும் புதிய அமைச்சர் பதவிக்கான வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கத் தொடங்கியுள்ளனர்.. கோட்டையின் ரகசிய அறையில், முதல்வர் விஜய்யின் மேஜை மீது அந்தப் தடிமனான உளவுத்துறை கோப்பு அமைதியாக மூடி வைக்கப்பட்டுள்ளது. அதில் சில பெயர்கள் சிவப்பு நிறத்தில் கோடிடப்பட்டிருக்கின்றன.

இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவடையும் அந்தத் தருணத்திற்காகக் காத்திருக்கிறது அந்த ஃபைல். தேர்தல் களம் ஓய்ந்த மறுநிமிடம், அந்த ஃபைலில் உள்ள உத்தரவுகள் வெளியே வரும். அமைச்சரவையில் இருந்து யார் வெளியேறப் போகிறார்கள், அதிகாரத்தின் உச்சத்திற்கு யார் புதிதாக உயரப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *