Advertisements

காசா இனப்படுகொலைக்கு எதிராக இஸ்ரேலைக் கண்டித்து தாம்பரத்தில் பேரணியையும் கண்டனப் போராட்டத்தையும் நடத்த உள்ளதாகப் பெரியாரிய உணர்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தந்தைப் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை ராமகிருட்டிணன் தலைமையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் காசா இனப்படுகொலையைக்கு எதிராக இஸ்ரேலைக் கண்டித்து சென்னையில் பேரணியையும், ஆணவப் படுகொலைக்குத் தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்கிறக் கோரிக்கையையும் வலியுறுத்தி பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்கரிய அமைப்புகள் ஒன்றுக் கூடி திட்டமிட்டுள்ளனர்.
தொடர்ந்து தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து வலியுறுத்தி உள்ளோம்.
இதையடுத்து ஆணவப் படுகொலையைக் கண்டித்து பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பதோடு, சாதி மறுப்பு திருமணங்களை நடத்தி வருகின்றோம் என தெரிவித்தனர்.
Advertisements



