Thaai Maaman Seer: பூப்பெய்த மருமகளுக்கு 56 தட்டு சீர்வரிசை வழங்கிய தாய் மாமன்மார்கள்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பூப்பெய்த மருமகளுக்கு ஐந்து தாய் மாமன்மார்கள் மேளதாளங்கள் முழங்க 56 தட்டு சீர்வரிசைபொருட்களுடன் ஊர்வலமாகச் சீர்வரிசை கொண்டு வந்த ஆபூர்வ காட்சியை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் ரசித்தனர்.

பொதுவாகத் தாய்மாமன்மார்கள் மேளதாளங்கள் முழங்க மருமகளுக்கு சீர் கொண்டு வரும் காட்சி, மதுரை திண்டுக்கல் சிவகங்கை புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் நடப்பது வழக்கம். அதே நேரம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பூப்பெய்தால், உறவினர்கள் சகிதம் மஞ்சள் நீராட்டு விழா மற்றும் விருந்து உபசரணைகள் நடப்பது வழக்கம்.

ஆனால் வழக்கத்துக்கு மாறாகக் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வைதியனாதபுரம் பகுதியில் உள்ள மணிகண்டன் நாகம்மாள் தம்பதியரின் மகள் மகேஸ்வரி வயதுக்கு வந்ததை அடுத்து, 5 தாய் மாமன் மார்கள் மேளதாளங்கள் முழங்க வாழைத்தார் வெள்ளி பாத்திரங்கள், பட்டுத் துணிகள், காய்கனிகள் என 56 தட்டு சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக வந்து சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற காட்சி அப்போது அப்மக்களை ஆச்சரியத்திற்கு உள்ளாகியது. இன்றைய நாகரிக வளர்சியால் அழிந்து வரும் நம் பாரம்பரிய முறைகளுக்கு இன்னமும் வரவேற்ப்பு – இதனை இளைய தலைமுறையினர் கண்டு வியப்படைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *