தாழ்தள மின்சார பேருந்து வாங்க டெண்டர் கோரியது!

Advertisements

தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பேருந்துகளை இயக்கும் வகையில் ஜெர்மனி வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் சுமார்சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இயக்குவதற்காக 500 தாழ்தள மின்சார பேருந்துகளை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. கோடி மதிப்பில் 5 கட்டமாகப் பல்வேறு போக்குவரத்து கழக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் ரூ.22½ கோடியில் வாங்கப்பட்டுள்ள 25 தாழ்தள பேருந்துகளை மக்கள் பயன்பாட்டுக்காகக் கடந்த செப்டம்பர் மாதம் 9-ந்தேதி அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் 12 மீட்டர் நீளமுள்ள 500 தாழ்தள மின்சார பேருந்துகளை வாங்க போக்குவரத்துத்துறை டெண்டர் கோரி உள்ளது.

குளிர்சாதன வசதி இல்லாதது, குளிர்சாதன வசதி உள்ளது என்று 2 வகையான 500 பேருந்துகளை வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.

சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இயக்குவதற்காக 500 தாழ்தள மின்சார பேருந்துகளை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *