
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்துள்ள நிலையில் தமிழகத்தில் இன்றும் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து குமரிக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலை கொண்டது. இது மேலும் மேற்கு – வட மேற்கு திசையில் நகரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்துள்ளது. தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக வேதாரண்யத்தில் 170மிமீ ,திருநெல்வேலி 140 மிமீ, நாகப்பட்டினம் 130மிமீ மழை பெய்துள்ளது.
இதற்கிடையே, 22 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்றும் தமிழகத்தில் இன்றும் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



