தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவிய வளிமண்டலச் சுழற்சி, காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளது. இது நாளை மறுநாள் புயலாக வலுவடைய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பர்லியார் – 250 மி.மீ, கீழ் கோத்தகிரி – 200 மி.மீ, எடப்பள்ளி – 161 மி.மீ, கோத்தகிரி – 137 மி.மீ, கெத்தை – 84 மி.மீ, தேவாலா – 82 மி.மீ,குன்னூர் – 81 மி.மீ, கொடநாடு – 81 மி.மீ., குன்னூர் ரூரல் – 75 மி.மீ.குந்தா – 74 மி.மீ.
தொடர் கனமழை காரணமாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் – குன்னூர் மலைப்பாதையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. பர்லியார் அருகே மண்சரிவில் அரசு பேருந்து சிக்கியுள்ள நிலையில், தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தென்காசி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
புதுச்சேரியிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

