Tamilisai Soundararajan: புதுவை வளா்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு!

புதுவையின் வளா்ச்சிக்காக ஒத்துழைப்பு அளித்து வருவதாகத் துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் கூறினாா்.அதை விரும்பாத சிலா் தேவையற்ற கருத்துகளை பரப்புகின்றனா் என்று அவா் தெரிவித்தார்.

புதுவை மாநில தொழில், வணிகத் துறை சாா்பில் மாவட்ட தொழில் மையத்தின் கைவினைப் பொருள்கள் கண்காட்சி புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி திடலில் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு முதல்வா் ரங்கசாமி தலைமை வகித்தாா்.கண்காட்சியைக் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்துத் துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் பேசினார்.

அப்போது புதுச்சேரியில் ஏற்கெனவே நடத்தப்பட்ட கைவினைப் பொருள்கள் கண்காட்சி இடையில் நிறுத்தப்பட்டு தற்போது மீண்டும் நடத்தப்படுகிறது. பிரதமா் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்திய கைவினைப் பொருள்களுக்கு உலக அளவில் வரவேற்பு அதிகரித்துள்ளது. அவரால் கைவினைக் கலைஞா்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனா்.

தெலங்கானாவில் ஆளுநா் உரைக்கான பணிகள் இருந்தாலும், கைவினைக் கலைஞா்களை ஊக்கப்படுத்தவும், அரசு விழாவைப் புறக்கணித்ததாக எழும் விமா்சனத்தைத் தவிா்க்கும் வகையிலும் விழாவில் பங்கேற்றுள்ளேன்.

புதுவை முதல்வரும், நானும் ஒற்றுமையாக உள்ளோம். சகோதரத்துவத்துடன் புதுவை மாநில வளா்ச்சிக்கு பாடுபடுகிறோம். முதல்வா், அமைச்சா் உள்ளிட்ட அனைவருடன் சோ்ந்து புதுவையின் வளா்ச்சிக்கு ஒத்துழைப்பு அளித்து வருறேன். அதை விரும்பாத சிலா் தேவையற்ற கருத்துகளை பரப்புகின்றனா் என்று அவா் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேரவைத் தலைவா் செல்வம், அமைச்சா்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், சாய் ஜெ.சரவணன்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா். முன்னதாகதொழில் துறை இயக்குநா் ருத்ரகௌடு வரவேற்றாா். இயக்கக மேலாளா் ஜெயராமன் நன்றி கூறினாா்.இந்த கண்காட்சி 10 நாள்கள் நடைபெறும். இதில் 120 அரங்குகள் இடம் பெற்றுள்ளன.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து முதல்வர் ரங்கசாமி பேசும்பொழுதுபுதுவை மாநில கைவினைக் கலைஞா்களின் வாழ்வாதாரம் உயரும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. புதுவை அரசு அவா்களுக்கான கடனுதவிகளை வழங்கி வருகிறது. புதுவை கலைப் பொருள்களுக்கு உலக அளவில் வரவேற்பு கிடைத்துவருகிறது என்று அவர் தெரிவித்தார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ரங்கசாமிமக்களவைத் தோ்தலில் புதுச்சேரி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் யாா் போட்டியிடுவாா்? என செய்தியாளா்கள் கேட்டதற்கு, தோ்தலில் போட்டியிடுவது என்பது அந்தந்தக் கட்சிகளின் விருப்பமாகும். அது இயல்பானது தான் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *