Tamilaga Vettri Kazhagam: தமிழக வெற்றிக்கழகம் சார்பில் 1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

Advertisements

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழக கட்சியின் சார்பாக ஏழை, எளியவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மார்ச் மாத துவக்கத்தில் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வர உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் மக்களுக்குப் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி ஆதரவு திரட்டி வருகின்றனர்.இந்த நிலையில் நடிகர் விஜய் நிர்வகித்து வந்த விஜய் மக்கள் இயக்கத்தைத் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி பெயரை அறிவித்துக் கட்சி தொடங்கியுள்ளார்.

இதனால் மாவட்ட அளவில் பொறுப்புகளில் இருந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தற்பொழுது தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளாக அறிவிக்கப்பட்டு மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கிக் களப்பணி ஆற்ற உத்தரவிட்டுள்ளார்.

இதன் ஒரு பகுதியாகத் தேனி மாவட்டம் பெரியகுளம் வடுகபட்டில் தமிழக வெற்றிக் கழக மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரகாஷ் தலைமையில் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான அரிசி, வேட்டி, சேலை, மற்றும் விவசாய கூலி தொழிலாளிகளுக்குப் பயன்படக்கூடிய மண்வெட்டி மற்றும் தட்டு உள்ளிட்ட உபகரணங்களைப் பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினர்.

மேலும் இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில்பேசிய இளைஞரணி செயலாளர் பிரகாஷ்முதலில் மக்களிடம் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் விஜய் ஆரம்பித்துள்ள அரசியல் கட்சி பெயரைக் கொண்டு சேர்க்க வேண்டும், அந்தந்த பகுதிகளில் உள்ள நிர்வாகிகள் பொது மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்க வேண்டும், வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சி பெயர் தெரியும் அளவிற்கு செயல்பாடுகள் செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.

இந்த நலத்திட்ட வழங்கும் விழாவில் தமிழக வெற்றிக் கழக கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *