
தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக ராயன் திரைப்படம் வெளியானது. அதனை அவரே இயக்கியிருந்தார். அடுத்ததாகச் சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துவருகிறார்.
இதற்கிடையில், ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்த அவர் பிரிவதாக அறிவித்தார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
இருவரையும் எப்படியாவது சேர்த்து வைத்துவிட வேண்டும் என்று இரண்டு குடும்பத்தினரும் முயன்றுவருவதாகக் கூறப்பட்டது. அதேசமயம் சமீபமாக ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்களைத் தனுஷ் லைக் செய்துக் கொண்டிருக்கிறார். ரஜினிகாந்த் சினிமாவுக்கு வந்து அடுத்த வருடத்துடன் 50 வருடங்கள் நிறைவு பெறுகின்றன.
எனவே அதனையொட்டி ஐஸ்வர்யா ஒரு பிரமாண்ட நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறார். அதில் தனுஷும் பங்களிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தனுஷ்- ஐஸ்வர்யாவின் விவாகரத்து வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
ஆனால் இரண்டு பேருமே நேரில் ஆஜராகவில்லை. எனவே அக்டோபர் 19ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தாங்கள் மீண்டும் சேர்ந்து வாழக்கூடலாமென ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.



