
தாம்பரத்தில் பிரபல லோ இ ஸ்வீட் ஸ்டாலில் கரப்பான் பூச்சியுடன் இனிப்புகள் வழங்கியதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.கரப்பான் பூச்சி கிடந்த உணவைச் சாப்பிட்டதால் வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகவும், இனிப்பகத்தில் ஏராளமான கரப்பான் பூச்சிகள் இருந்ததால் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.
கிழக்கு தாம்பரம் பாரதமாத சாலையில் லோ யூ என்ற பிரபலமான இனிப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்தச் சுவிட்ஸ் ஸ்டாலில் கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த பாபு என்பவர் இனிப்பு மற்றும் மிச்சர் வாங்கி சாப்பிட்டு உள்ளார். அப்போது அவருக்குத் திடீரென லேசான மயக்கம் மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. தான் சாப்பிட்ட இனிப்பு மற்றும் மிச்சர் இருந்தால் எதோ பிரச்சனையென எண்ணி கடைகளில் கடையில் வந்து கேட்டபோது ஊழியர்கள் மல மழுப்பலான பதில் அளித்துள்ளனர். அப்போது சுவிட் வைக்கப்பட்டுள்ள பாக்ஸ்களை ஆராய்ந்தபோது அதில் ஏராளமான கரப்பான் பூச்சிகள் மற்றும் பாசிகள் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து கடை ஊழியர்களுடன் வாடிக்கையாளர் வாக்குவாதம் செய்ததும் தன்னை மன்னித்து விடும்படி கையெடுத்து கும்பிட்டு வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் உடனடியாகக் கடையை அடைத்து விட்டுக் கடை ஊழியர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். பிரபலமான இனிப்பகத்திலே இது போன்ற சுகாதார முறையில் இருப்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இது போன்ற பிரபல இனிப்புகளின் சோதனை நடத்தி தரமான பொருட்களை விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் வாடிக்கையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

