Taj Mahal: உலக கோப்பை!

Advertisements

Taj Mahal |ICC Men’s Cricket World Cup 2023 Trophy

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் 50 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில் நேற்று உலக கோப்பை காட்சிப்படுத்தப்பட்டது…

உலக கோப்பை போட்டி அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதிவரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடக்கிறது.இந்தப் போட்டியின் முதல் ஆட்டம் அக்டோபர் 5ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது.

இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8-ம் தேதி சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

இந்த நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான உலக கோப்பையை உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில் நேற்றுகாட்சிப்படுத்தப்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *