பாகிஸ்தானின் 164 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்த இங்கிலாந்து..!

Advertisements
 20 ஓவர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி முதல் அணியாக இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இலங்கையின் பல்லேகலே மைதானத்தில் 20 ஓவர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்று பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 19 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து  வெற்றி பெற்றது. இதில், ஹாரி புரூக் தனி ஆளாகப் போராடி அதிரடியாக ஆடி சதமடித்தார். இந்நிலையில், 20 ஓவர் உலகக் கோப்பையில் சதம் அடித்த முதல் கேப்டன் என்ற சாதனையை ஹாரி புரூக் படைத்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *