T. T. V. Dhinakaran: ஓபிஎஸ்வுடன் அரசியலில் இணைந்து செயல்பட முடிவு!

Advertisements

எடப்பாடி பழனிச்சாமியின் தவறான நிர்வாகத்தாலும் சுயநல கும்பலாலும் அதிமுக களவாடப்பட்டுவிட்டது. களவாடி கபளீகரம் செய்யப்பட்ட அதிமுகவை மீட்டெடுக்க உருவாகியது தான் அமமுக, எனத் டிடிவி தினகரன்தெரிவித்தார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த எம்ஜிஆர் 107ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடலூர் வருகை தந்து கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அப்போது அங்குக் குவிந்த கட்சி நிர்வாகிகள் அவருக்கு மலர் தூவி வான வேடிக்கையுடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து பேசிய டி.டி.வி, எம்ஜிஆருக்கு பின் அரசியல் வாரிசாக 16 ஆண்டுகள் ஜெயலலிதா கட்டிகாத்தார்.எடப்பாடி பழனிச்சாமியின் தவறான நிர்வாகத்தாலும் சுயநல கும்பலாலும் அதிமுக களவாடப்பட்டுவிட்டது. களவாடி கபளீகரம் செய்யப்பட்ட அதிமுகவை மீட்டெடுக்க உருவாகியது தான் அமமுக, எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்த அவர்பேசியதாவது:, ஓபிஎஸ் நானும் வருங்கால அரசியலில் இணைந்து செயல்பட வேண்டும் என ஒரு முடிவை எடுத்துள்ளோம் கூட்டணிபற்றி உரிய நேரத்தில் முடிவு அறிவிப்போம் என்றார்.ஒரு கட்சி மற்றொரு அரசியல் கட்சியுடன் கூட்டணி வைத்துத் தேர்தலைச் சந்திப்பதில் எந்தத் தவறும் இல்லை.

தமிழ்நாட்டுக்கு மக்களின் நலனுக்கு எதிராக எந்தக் கட்சி செயல்பாட்டாலும் அவர்களும் கூட்டணி வைக்கமாட்டோம் உறுதியாகத் தெரிவித்து இருந்தேன்.விவசாயிகளைத் தமிழ்நாட்டு மக்களைப் பாதிக்கும் திட்டங்களைத் தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் , மீத்தேன் ஹைட்ரோ கார்பன் என மத்திய அரசு திணிப்பதை செய்தது.தற்போது அந்த நிலைப்பாட்டில் மத்திய அரசு மாதிரி இருப்பதால் தற்போது கடுமையான எதிர்ப்பைக் காட்டவில்லை.

தமிழ்நாட்டு மக்கள் விரும்பாத திட்டங்களை இங்கே திணிப்பதில்லையென நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்துள்ளதாகத் தெரிகிறது. அதனால் நாங்கள் கடுமையாக விமர்சிப்பதை குறைத்துள்ளோம் வெள்ள நிவாரணத்துக்கு உரிய நிதியை மத்திய அரசு தர வேண்டும் எனவும்திருவள்ளுவருக்கு காவி ஆடை விவகாரத்தில் ஆளுநர் செய்து இருப்பது  ஆளுநர் பதவிக்கு இழுக்கு ஏற்படுத்தும் விதமாக உள்ளது.

இது போன்று நடவடிக்கைகள் ஆளுநர் செய்வது தவறு. அவரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பது தமிழ் மக்களின் கோரிக்கை என்றார்.தொடர்ந்தது தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது பற்றித் தற்போது யோசிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி மத்திய மாவட்ட செயலாளர் பூக்கடை சக்திவேல் கடலூர் மாநகர செயலாளர்ராதாகிருஷ்ணன் மற்றும் நகர ஒன்றிய பேரூர் பகுதி கிளை உள்ளிட்ட ஏராளமான அமமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *