
சவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்யக் கோரி ரிட் மனு ஒன்றை யூடியூபர் சவுக்கு சங்கர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் தற்போது புதிதாகப் பதிவு செய்யப்பட்ட குண்டர் சட்ட வழக்கை எதிர்த்தும் மேல் முறையீடு செய்யச் சவுக்கு சங்கருக்கு அனுமதி அளித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு பிணை வழங்கியபிறகும் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதா..? எனக் கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, மேலும் என்னென்ன வழக்குகள் போடப்பட்டுள்ளன போன்ற விவரங்களையும் தாக்கல் செய்யச் சவுக்கு சங்கர் தரப்புக்கு ஆணையிட்டார்.

