Crime: பெண்ணின் கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி 9 சவரன் தங்க நகை பறித்த மர்ம நபர்!

இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி 9 சவரன் தங்க நகை பறித்து சென்ற மர்ம நபர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள மேல்ஆதனூர் கிராமத்தை சேர்ந்த மீனா இவர் தனது தாய் வீடான வேப்பூர் அருகே உள்ள கழுதூர் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தனது மோட்டார் சைக்களில் சென்றுள்ளார் அப்பொழுது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அமர்ந்திருந்த மர்மநபர் திடீரென மீனாவின் கண்ணீல் மிளகாய்ப்பொடி தூவி உள்ளார்.

இதில் இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த மீனாவின் கழுத்தில் இருந்த தாலி மற்றும் தங்க செயினை கத்தியை காட்டி மிரட்டி பறிக்க முயல மீனா விடாமல் அவரிடம் மல்லுகட்ட முகம் மற்றும் கை கால்களில் மீனாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது அந்த நபர் கழுத்தில் இருந்த ஏழு சவரன் தங்க நகையை பறித்து கொண்டு தப்பி ஓடி உள்ளார்.

மீனா கூச்சல் போட வயலில் ஆடு மாடு மேய்துக்கொண்டு இருந்தவர்கள் ஓடி வந்து வேப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

மீனாவை மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை அடுத்து வேப்பூர் போலீசார் அப்பகுதியில் வாகன சோதனையை செய்யும் போது தொண்டங்குறிச்சி கிராமம் அருகே ஒரு நபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடி உள்ளார் அந்த நபரை பிடித்து வேப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *