
பாட்னா: வருகிற தேர்தலில் 4 ஆயிரம் தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று பீகார் முதல்வர் நிதீஷ் குமார் வாய் தவறி கூறியதை கிண்டல் செய்வது கிண்டல் செய்வது சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது.
எதிர் கட்சிகளின் இந்தியா கூட்டணியில் முக்கிய தலைவராக இருந்து வந்த நிதீஷ் குமார் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திடீர் பல்டி அடித்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தனது கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தை இணைத்துக் கொண்டார்.
பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவருடைய முன்னிலையில் நிதிஷ்குமார் இந்த கூட்டத்தில் பேசினார்.
பொதுவாக பாஜக கூட்டணி இந்த தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்று அதன் தலைவர்கள் பேசி வருகிறார்கள். ஆனால் நிதிஷ் குமார் பேசும்போது 400 என்று சொல்வதற்கு பதிலாக 4000 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று வாய் தவறி கூறிவிட்டார்.
அவருடைய இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் விரிவாக வெளிவந்தன. அதில் முதலில் நிதீஷ் குமார் 4 இலட்சம் என்று என்று கூறி பின்னர் நான்காயிரம் என்று சொன்னதும் பதிவாகி இருந்தது.
நிதீஷ் குமாரின் இந்த பேச்சை ஆர் ஜே டி தலைவர்கள் அதன் செய்தி தொடர்பாளர் சரிகா பஸ்வான் உள்ளிட்டோர் கிண்டலாக விமர்சித்து வருகிறார்கள். “முதல்வர் நிதிஷ்குமார் பிரதமருக்கு 4 லட்சத்துக்கும் அதிகமான எம்பிக்கள் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்று விரும்புகிறார். பின்னர் அது அதிகம் என்று நினைத்தாரோ என்னவோ 4000 எம்பிக்கள் போதும் என்று நினைத்து விட்டதாக” சரிகா பஸ் வா தனது சமூக வலைதள பதிவில் கலாய்த்திருக்கிறார்.
பொதுக் கூட்ட மேடைகளில் நிதிஷ்குமார் இது போல் வாய் தவறி வார்த்தைகளை விடுவது இது முதல் முறை அல்ல. இதை குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் நிதிஷ்குமாரை கிண்டல் அடித்து நெட்டிசன்கள் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.



